நாடு முழுவதும் இன்று இரவு கோடிக்கணக்கான வீடுகளில் 9 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்பட உள்ள நிலையில், இது மின் வாரியத்தினருக்கு சவாலான பணியாக மாறியிருக்கிறது.

ஒரே நேரத்தில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு 9 நிமிடங்களில் அவற்றை மீண்டும் ஒளிர செய்வதால், ஏற்படும் தொழில் நுட்ப சிக்கல்கள்தான் இதில் மிகப் பெரிய சவால். மின் விளக்குகளை ஒரே நேரத்தில் அணைத்து விட்டு மீண்டும் எரியவைக்கும் இந்நிகழ்வை வேகமாக சென்று கொண்டுள்ள ஒரு காரை திடீரென நிறுத்துவது அல்லது திடீரென அதன் வேகத்தை அதிகப்படுத்துவதால் ஏற்படும் விளைவுடன் இந்நிகழ்வை ஒப்பிடலாம் என்கின்றனர் மின்சார தொழில் நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.

நம்ம வேலைய நாமதான செய்யணும்: அசத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!!

image

மின்சாரத்தை வீடுகளுக்கு கொண்டு செல்லும் போது மின்னலைகளுக்கான அதிர்வெண்ணை 48.5 முதல் 51.5 என்ற எண்ணுக்குள் பராமரிப்பது அவசியம். மின்தேவை திடீர் குறைவு அல்லது அதிகரிப்பால் அதிர்வெண் மாறுபட்டால் அது மின் தடைக்கு வழிவகுக்கலாம்.

2012 ஆம் ஆண்டு வட இந்தியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய மின் வெட்டு நிகழ்வு இதற்கு உதாரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. இந்தியாவில் மின் வினியோகம் தலா 15 நிமிட நேரம் கொண்ட 96 நேரத் தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு வினியோகம் நடக்கிறது. இதில் இடையில் 9 நிமிடம் மட்டும் வினியோகம் நிறுத்தப்படுவதை கையாள்வது கடினமான பணியாக இருக்கும், எனினும் மின்விளக்கு அணைப்பு நிகழ்வுக்கு அவகாசம் இருப்பதால் உரிய முறையில் தயாராகும் வாய்ப்பு மின் வாரியங்களுக்கு இருக்கின்றன.

 

வீட்டிற்குள் அமர்ந்துகொண்டு உலகத்தை காக்கும் வாய்ப்பு – நடிகை மீனா

 

image
இது சவாலான பணிதான் என்ற போதிலும் உரிய திட்டமிடலுடன் எந்த சிக்கலும் இல்லாமல் நடத்தி முடிப்பது சாத்தியம்தான் என மின்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இதில் சில தொழில்நுட்ப பிரச்னைகள் இருந்த போதிலும், விளக்குகள் மட்டுமே அணைக்கப்படும் என்பது சாதகமான அம்சமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இரவு 9 மணிக்கு மின்சார தேவை கணிசமாக குறைந்து அடுத்த 10 வது நிமிடத்தில் மின் தேவை அதிகரிக்க போகும் நிலையில் என்ன நடக்கும் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.