இன்று காலை 9 மணிக்கு வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு சில தகவல்களை பகிரவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், தற்போதைய நிலவரம் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் நேற்று உரையாடினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரும் இந்த காணொளி ஆலோசனையில் கலந்து கொண்டனர். அப்போது, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்தார்.
இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு சில தகவல்களை பகிரவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சில தகவல்களை மக்களிடம் பகிரவுள்ளதாக பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டுமென்று பிரதமர் கேட்டுக்கொள்வார் என்றும் அது தொடர்பான விழிப்புணர்வு தகவல்களை அவர் கூறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கொரோனா பாதிப்பு தொடர்பாக ஏற்கனவே இரண்டு முறை பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார்.
தமிழகத்தில் 309 பேருக்கு கொரோனா : எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் ?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM