கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அத்தியாவசியமாக தேவைப்படும் பொருள்களைத் தவிர மற்ற பொருள்களை விற்கும் கடைகளைத் திறக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இந்நிலையில் மக்களில் சிலர் தங்களுக்கு விருப்பமான உணவுகளைக் கேட்டுக் காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் அவசர எண்ணிற்கு அழைத்து வருகின்றனர். உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவியும் செய்கின்றனர். எனினும், சிலருக்கு அதிகாரிகள் நூதனமான தண்டனைகளை வழங்கி எச்சரித்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் ராம் சந்திர பிரசாத் கேசர்வானி என்ற வயதான ஒருவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு தனக்கு ரஸகுல்லா வேண்டும் எனக் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை அழைத்து கேட்டுள்ளார். காவலர்களும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ரஸகுல்லாவுடன் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர். அவர் தன்னுடைய வீட்டில் தனியாகவே வசித்து வருகிறார். அவருடைய குழந்தைகள் வெளிநாடுகளில் தங்கியுள்ளனர். ஊரடங்கு காலத்தில் அவருக்கு இனிப்பு தேவைப்பட்டதால் காவல்துறையினரிடம் கேட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி சந்தோஷ் சிங் பேசுகையில், “வயதானவரின் அழைப்பைக் கேட்டதும், அது கேலிக்குரியது இல்லை என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். நாங்கள் அவருடைய வீட்டிற்கு ஆறு ரஸகுல்லாக்களை வாங்கிச் சென்றோம். வீட்டில் அவர் தனியாக இருப்பதையும் அவருடைய உடலில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதையும் நாங்கள் பார்த்தோம். அவரால் அசையக்கூட முடியவில்லை. ரஸகுல்லாக்களை அவரிடம் கொடுத்ததும், அவற்றில் நான்கை சாப்பிட்டார். பின்னர், மெதுவாக இயல்புநிலைக்குத் திரும்பினார்” என்றார்.

Also Read: ‘4 சமோசா வேணும்!’ -அவசர எண்ணில் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு பாடம் கற்பித்த கலெக்டர்

இதே போல கடந்த ஞாயிற்றுக்கிழமை, ராம்பூர் மாவட்டக் கட்டுப்பாட்டு அறைக்கு இளைஞர் ஒருவர் போன் செய்து தனக்கு நான்கு சமோசா வேண்டும் என்று கூறியுள்ளார். அதிகாரிகள் எச்சரித்தும் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தனக்கு சமோசா வேண்டும் என அடம்பிடித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் நான்கு சமோசாவை ஆர்டர் செய்து அந்த இளைஞரின் முகவரிக்குக் கொண்டு சென்று கொடுக்குமாறு கூறியுள்ளார். அதோடு விட்டுவிடவில்லை. சூழல் புரியாமல் அத்துமீறிய இளைஞருக்குப் பாடம் புகட்டும் விதமாகக் கழிவுநீர்க் கால்வாயைச் சுத்தம் செய்யவும் வைத்துள்ளனர். இந்தப் புகைப்படத்தைப் பதிவிட்ட மாவட்ட ஆட்சியர் அந்த இளைஞர் செய்ததை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பின்னர், அதிகாரிகள் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

உத்தரப்பிரதேச காவல்துறை

கட்டுபாட்டு அறைக்கு வரும் அழைப்புகள் குறித்து தொடர்ந்து பேசிய காவல்துறை அதிகாரிகள், “மக்கள் பீட்சா மற்றும் சமோசாக்கள் போன்றவற்றைக் கேட்டு அவசர எண்ணைத் தொடர்ந்து அழைத்து வருகின்றனர். எனவே, இத்தகைய சூழலில் நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் இதுமாதிரயான பொருள்களைக் கேட்டு அழைப்பவர்களைத் தண்டிக்க முடிவு செய்துள்ளோம். எனினும், உண்மையிலேயே அவசரமாகப் பொருள்கள் தேவைப்படும் பட்சத்தில் நாங்கள் உதவி செய்யத் தயாராக இருக்கிறோம். இதேபோல கர்ப்பிணி ஆசிரியை ஒருவருக்கு உணவு தேவைப்பட்டது என்ற தகவல் கிடைத்ததும் நாங்கள் உணவு வழங்கினோம். லக்னோவில் சில காவல்நிலையங்களுக்கு மதுபானம், பான் போன்றவை தேவைப்படுவதாக்கூறி அழைப்புகள் வருகின்றன. நாங்கள் அவரை மருத்துவரை அணுகும்படி கேட்டுக்கொண்டோம்” என்று தெரிவித்துள்ளனர்.

Also Read: கொரோனா ஊரடங்கு: குடிநோயாளிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறது தமிழக அரசு?

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.