144 தடையை மீறியதாக தமிழகம் முழுவதும் 5 நாட்களில் 54,400 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். போக்குவரத்து போலீசார் அபராதமாக ரூ. 10 லட்சத்தை வசூலித்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணிக்க தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவின் பேரில் 6 ஏடிஜிபிக்கள் தமிழகத்தில் நியமிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

image

போலீசார் தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்த 5 நாட்களில் தமிழக காவல்துறை 45, 847 வழக்குகளை பதிவு செய்துள்ளது. தடையை மீறியதாக 54, 400 பேரை காவல்துறை கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளது. 34, 119 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 10 லட்சத்து 89ஆயிரத்து 108 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

image

சென்னையில் கடந்த 24ம்தேதி முதல் 30-ம்தேதி வரை 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக 2,646 வழக்குகளும், தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறிய குற்றத்திற்காக 17 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து காவல் துறையினர், போக்குவரத்து விதிமுறைகள் மீறல் தொடர்பாக மொத்தம் 9,163 வழக்குகளை பதிவு செய்துள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

“20 மணி நேரம்.. 450 கிலோ மீட்டர் நடைப்பயணம்..” சிலிர்க்க வைத்த காவலரின் கடமையுணர்ச்சி..!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.