தனது பணியில் சேருவதற்காக 20 மணி நேரம் நடந்து சென்ற காவலருக்கு மத்தியப் பிரதேசத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். காவல்துறையினர் கொரோனா வைரஸையும் பொருட்படுத்தாமல் மக்களை வெளியே செல்லமால் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து மத்தியப் பிரதேசம் வரை நடந்து சென்று ஒரு காவலர் தனது பணியில் சேர்ந்திருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 22 வயது இளைஞரான திக்விஜய் ஷர்மா மத்தியப் பிரதேசத்தில் கான்ஸ்டேபிளாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றிருந்தார். இவர் மீண்டும் பணியில் சேருவதற்குள் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இதுபோன்ற இக்கட்டான சூழலில் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என எண்ணிய திக்விஜய், தனது காவல்நிலைய ஆய்வாளரிடம் அனுமதி கோரினார். போக்குவரத்து இல்லாததால் வீட்டிலேயே இருக்குமாறு ஆய்வாளர் கூறியிருக்கிறார். திக்விஜயின் குடும்பத்தினரும் வீட்டில் இருக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனாலும் மக்களுக்காக பணியாற்ற துடித்த அந்த இளைஞர், கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி காவலர் சீருடையை அணிந்துகொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டிருக்கிறார்.
ஒருநாள் முழுவதும் ஓய்வு எடுத்து, ஓய்வு எடுத்து உணவின்றி நடந்து சென்றிருக்கிறார். பின்னர் சமூக ஆர்வலர்கள் ஆங்காங்கே வழங்கிய உணவை வாங்கி சாப்பிட்டிருக்கிறார். இவ்வாறாக 28ஆம் தேதி அன்று உத்தரப் பிரேசத்தின் பசோர் பகுதியில் உள்ள தங்கள் காவல்நிலையத்தை அடைந்திருக்கிறார். வரும் வழியில் சிலர் அவருக்கு இருசக்கர வாகனத்தில் லிஃப் கொடுத்திருக்கின்றனர். சுமார் 450 கிலோமீட்டர் அவர் கடந்து வந்ததால் தற்போது அவரது கால்கள் புண்பட்டு இருப்பதால் அவரை ஓய்வெடுக்க காவல்துறை எஸ்.பி மற்றும் ஆய்வாளர் உள்ளிட்டோர் அறிவுத்தியுள்ளனர். கடமைக்காக கால்கள் புண்னாக நடந்த அந்த இளைஞருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
‘கொரோனா அச்சம் எங்களை வாட்டுகிறது’: கோவாவில் தவிக்கும் தமிழக மீன்பிடி தொழிலாளர்கள்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM