டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1500 தமிழர்கள் : 16 பேருக்கு கொரோனா ?

புதுடெல்லி மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 1500 நபர்களில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலில், புதுடெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் தவுஹித் ஜமாத் அமைப்பின் சார்பில் தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுமார் 1500 பேர் பங்கேற்றுள்ளார்கள்.

image

இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்றவர்களில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே மீதமுள்ள நபர்களின் விபரங்களை சேகரித்து அடையாளம் கண்டறியும் பணி தமிழக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

‘ஹலோ மாஜிஸ்ட்ரேட் ஆபிஸா.. எனக்கு நாலு சமோசா வேணும்’: டார்ச்சர் செய்த இளைஞர்

முன்னதாக, தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM