எமதர்மராஜா வேடம் போட்டு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் உடுமலைப்பேட்டை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகில் 6,77,938 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதில் 1,46,319 குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 31,746 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனிடையே இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், ஆங்காங்கே பொது மக்கள் அரசின் உத்தரவை மீறி வெளியே வருகின்றனர். பல நேரங்களில் போலீஸார் அறிவுரைகள் கூறியும், அபராதம் விதித்தும், வழக்கு தொடர்ந்தும் வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாகத் தமிழகம் முழுவதும் 11,565 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விதிகளை மீறியதாக 17,668பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொரோனா வைரஸ் போன்ற ஹெல்மெட்டை அணிந்து, வாகனங்களில் செல்வோருக்கு அறிவுரைகள் வழங்கி வீடியோ ஒன்று நேற்று வெளியானது. அவர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். மேலும் சில இடங்களில் தடையை மீறி வெளியே வருபவர்களின் வாகனங்களில் போலீசார் மஞ்சள் வண்ணம் பூசி, நூதன தண்டனையையும் வழங்கினர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை போலீசார், 144 தடையை மீறி வெளியே வரும் பொதுமக்களுக்கு மற்றொரு வகையில் நூதன விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளனர். சித்ர குப்தன் மற்றும் எமதர்மராஜா வேடத்தில் உடையணிந்த போலீசர் சாலையில் பயணிக்கும் வானக ஓட்டிகளை மடக்கி அவர்கள் கழுத்தில் ‘பாசக் கயிற்றை’ வீசி கொரோனா பாதிப்பை ஒரு நாடகம் போல் நடித்துக் காட்டி வருகின்றனர். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது பகிரப்பட்டு உள்ளது. அதனைப் பலரும் ரசித்துப் பார்த்து வருகின்றனர்.
தமிழக போலீசாரின் புதிய முயற்சி: கொரோனா ரூபத்தில் உலாவும் எமன்.. ???
Yamadharma waiting at roadside.. Plz #StayAtHomeAndStaySafe
Good attempt @TNPOLICE_HQ
Loc: Near Udumalaipettai, Tiruppur district
@chennaipolice_ #lockdown #CoronaUpdate @News18TamilNadu pic.twitter.com/IbxQhevd1k— Mahalingam Ponnusamy (@mahajournalist) March 29, 2020
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM