உலகெங்கும் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 30 ஆயிரத்தை கடந்தது. இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு. தொற்றுள்ள பகுதிகளில் வீடுவீடாக சென்று பரிசோதனை செய்ய முடிவு.
aஊரடங்கு நேரத்தில் அவசர பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு அனுமதி வழங்க ஏற்பாடு. கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு முன் அனுமதி பெறலாம்.
நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உடல்நலக்குறைவால் காலமானார்
வருகிற 3-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் திறந்திருக்கும். ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ரூ.1000 நிதியுதவி வழங்கும் பணி தொடங்கவுள்ளதாக அரசு அறிவிப்பு.
காய்கறி, மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்க்குகள் இன்று முதல் மதியம் இரண்டரை மணி வரை மட்டுமே இயங்கும். கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு அடுத்த நடவடிக்கை.
வேலை சம்பந்தமாக வெளியில் செல்வோருக்கு பாஸ் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு
கொரோனா தடுப்பு பணிகளுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம். கொரோனா தடுப்பு குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
சொந்த ஊர் திரும்ப முடியாமல் டெல்லியில் குவிந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள். பேருந்து வசதிக்காக பல மணி நேரமாக காத்திருப்பால் கொரோனா பரவும் அச்சம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM