தமிழகத்தில் அமலுக்கு வந்த நேரக் கட்டுப்பாடு!

தமிழக அரசு

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும் பல்வேறு வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக காய்கறி விற்பனைக் கடைகள், அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் விற்பனைக் கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்.

Also Read: `காய்கறி கடைகள் முதல் ஸ்விக்கி வரை..!’ – தமிழக அரசு அறிவித்த நேரக் கட்டுப்பாடுகள்

Swiggy, Zomato போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களின் குறிப்பிட்ட நேரங்களுக்கு உணவும் எடுத்துச் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காலை 7 மணி முதல் 9.30 மணி வரை காலை சிற்றுண்டியும், 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மதிய உணவும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரவு உணவும் எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. அதேநேரம், மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் நாள் முழுவதும் எப்போதும்போல செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு அறிவித்த இந்த நேரக்கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்தது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 918ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 918ஆக அதிகரித்திருக்கிறது. இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Also Read: `களத்தில் இறங்குவதற்கான தேவை அதிகமாகிவிட்டது’ – கொரோனா பாதிப்புக்கு ரூ.1,500 கோடி அறிவித்த டாடா

பிரதமர் உரையாற்றும் மன் கி பாத்!

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் இருக்கிறது. இந்தநிலையில், மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்ற இருக்கிறார். கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அவர் உரையாற்ற இருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.