கர்நாடகாவை சேர்ந்த 76வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்தது உறுதியானது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74ஆக அதிகரிப்பு.
கொரோனா பரவுவதை தடுக்க தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு பிரதமர் மோடி கோரிக்கை. கொரோனா குறித்த பயத்திற்கு நோ சொல்லுங்கள்; முன்னெச்சரிக்கைக்கு யெஸ் சொல்லுங்கள் என்றும் வேண்டுகோள்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்.
கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா அறிகுறி. கொரோனா பரவுவதை தடுக்க ஐரோப்பியர்களின் வருகைக்கு தடை விதித்தது அமெரிக்கா.
இந்தியா – தென்ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு. கொரோனா அச்சத்தால் இன்று நடைபெறும் ரஞ்சி கோப்பை போட்டியும் ரசிகர்கள் இன்றி நடத்தப்படுகிறது.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு தமிழகத்தில் நிறுத்திவைப்பு. வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு.
என்பிஆர் கணக்கெடுப்பில் யாரும் சந்தேகத்திற்குரிய பிரிவில் வைக்கப்படமாட்டார்கள். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்.
பணபலம், அதிகார பலத்திற்கு எதிராக மக்களிடம் எழுச்சி வந்ததும் அரசியலுக்கு வர ரஜினிகாந்த் உறுதி. அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போது இல்லையெனில் இனி எப்போதும் இல்லை என ஆவேசம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM