இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100ஐ தொட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்டை நாடுகளுடனான
எல்லைப்பகுதிகள் மூடல்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு பொதுவான திட்டம் வகுக்க சார்க் நாடுகள் முடிவு. பிரதமர் மோடி தலைமையில் தெற்காசிய நாடுகளின்
தலைவர்கள் இன்று ஆலோசனை.

Image result for modi

பஹ்ரைன் நாட்டிலிருந்து கேரளாவுக்கு விமானத்தில் வந்த நபருக்கு கொரோனா உறுதி. கொரோனா பாதித்தவர் வந்த விமானத்தில் தமிழகத்தைச்
சேர்ந்த 21பேர் பயணித்ததாக திருவனந்தபுரம் ஆட்சியர் தகவல்.

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அறிவிப்பு. முரண்பட்ட தகவல்களால் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்ட நிலையில் விளக்கம்.

திருப்பதியில் கூண்டுகளில் காத்திருக்காமல் நேரடியாக தரிசனம் செய்ய ஏற்பாடு. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோயில் நிர்வாகம் நடவடிக்கை.

Image result for edappadi

சிஏஏ, என்பிஆருக்கு எதிராக பேரவையில் தீர்மானம் கொண்டு வர 49 இஸ்லாமிய அமைப்பினர் வலியுறுத்தல். முதல்வரின் கவனத்துக்கு கொண்டு
செல்வதாக மனுவை பெற்றுக்கொண்ட தலைமைச் செயலாளர் சண்முகம் உறுதி.

மொபைல் போன்களின் விலை கணிசமாக உயர வாய்ப்பு. 12 சதவிகிதமாக இருந்த ஜிஎஸ்டி வரி 18சதவிகிதமாக அதிகரிப்பு.

சேலம் அருகே கடத்தப்பட்டதாக கூறப்பட்ட புதுமணப்பெண், பெற்றோருடன் தனது வீட்டிற்கு சென்றார். கணவர் உட்பட 4பேர் மீது காவல்துறையினர்
வழக்குப்பதிவு.

மத்திய பிரதேசத்தில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் கமல்நாத்திற்கு ஆளுநர் உத்தரவு. 22 எம்எல்ஏக்கள் பதவி விலகிய சூழலில்
காங்கிரஸ் ஆட்சி நீடிக்குமா என்பதில் சந்தேகம்.

Image result for trump

கொரோனா முன்னெச்சரிக்கையாக ஸ்பெயினில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர தடை. அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு நடத்தப்பட்ட
பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தகவல்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.