வலியால் துடித்த கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவி செய்த காவல் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிகின்றன

மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மருமகள் ஸ்ரீமதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் 144 தடை உள்ளதால் கர்ப்பிணியை மருத்துவமனை அழைத்துச் செல்ல ஆட்டோவோ, காரோ கிடைக்கவில்லை. அப்போது அங்கு தெப்பக்குளம் காவல் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். உடனடியாக கார் ஒன்றை ஏற்பாடு செய்த காவலர் டீசலுக்கு பணமும் கொடுத்து உதவியுள்ளார்.

image

அதுமட்டுமின்றி கர்ப்பிணியின் வீட்டிற்கு வந்து மருத்துவமனை செல்ல உதவியும் செய்துள்ளார். காவல் அதிகாரியின் உதவிக்கு நன்றி தெரிவித்த முருகேசன், வாட்ஸ் அப்பில் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களிலும் காவல் அதிகாரிக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

image

அவசர உதவி தேவையென்றால் 108ஐ அழைக்கலாம் என்றும் மருத்துவ உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.