விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மிக வேகமாக நடந்து வருகின்றன.

நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இதனை ‘மாநகரம்’ மற்றும் ‘கைதி’ ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இவருடன் விஜய் முதன்முறையாக இணைந்துள்ளார். இந்த இயக்குநரின் இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதினால் விஜய்யின் படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா அச்சம் பரவி வருவதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளதால் ஒட்டு மொத்த திரை உலகமும் முடங்கிப் போய் கிடக்கின்றது.

Image

ஆகவே அடுத்த மாதம் திட்டமிட்டபடி ‘மாஸ்டர்’ வெளியாகுமா என அவரது ரசிகர்கள் சந்தேகத்தில் உள்ளனர். இந்நிலையில் ‘மாஸ்டர்’ படம் குறித்து ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், ஒட்டுமொத்த திரையுலகமே முடங்கிப் போய் இருக்கும் இந்த வேளையிலும் ‘மாஸ்டர்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் திட்டமிட்டவாறு விறுவிறுப்பாக நடந்து வருவதாக தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், தனது ஒளிப்பதிவு சார்ந்த டிஐ தொழில்நுட்ப வேலைகளை (டிஜிட்டல் இண்டர்மிடியேட்) மும்முரமாக செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஒலிப் பதிவுக்கான வேலைகளும் நடப்பதாகத் தெரிகிறது. இந்தப் படத்தின் இசை ஆல்பம் ஏற்கெனவே வெளியாகி 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளதால், படக்குழு அந்த எதிர்பார்ப்பைச் சற்றும் குறைய விடாமல் படத்தைச் செறிவூட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

Image

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பாக இப்படத்தினை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷாந்தணு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் மிக முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளனர். இதன் இசை வெளியிட்டு விழா சில வாரங்கள் முன்பு ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.