`பெற்றோரை இழந்த பெண்’ – கறி விருந்து, சீர்வரிசை என திருமணத்தை நெகிழ வைத்த பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தற்போது பத்திரப்பதிவுத்துறை தலைவராக இருக்கிறார். இவர் மாவட்ட ஆட்சியராக இருந்த போது பேராவூரணி அருகே உள்ள ரெட்டவயல் கிராமத்தைச் சேர்ந்த பாண்டிமீனா என்பவரின் தந்தை நுரையீரல் பாதிப்பில் இறந்துவிட்டதையும், தாய் செல்வி …