தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ், தன்னுடைய ஆட்சி நடைபெற்றுவரும் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்) கட்சியுடன் காங்கிரஸ் கைகோர்த்திருப்பதே என முதல்வர் மம்தா கூறிவருகிறார். அதோடு, மேற்கு வங்கத்தில் காங்கிரஸையும், பா.ஜ.க-வையும் மம்தா கடுமையாக எதிர்த்து வருகிறார்.

மம்தா – சோனியா

ஏப்ரல் 26-ல் நடைபெற்ற நாடாளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடந்த நிலையில், வரும் மே 7-ம் தேதி நடைபெறவிருக்கும் மூன்றாம் கட்ட தேர்தலில் 4 தொகுதிகளில் வாக்குப் பதிவைக் காணவிருக்கிறது மேற்கு வங்கம். இதையொட்டி தீவிர பிரசாரம் மேற்கொண்டுவரும் மம்தா, மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் அல்லது சி.பி.எம் கட்சிக்கு வாக்களிப்பது பிரதமர் மோடிக்கு சாதகமாகப் போய்விடும் என எச்சரித்திருக்கிறார்.

மால்டா நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சுஜாபூரில் நேற்று நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய மம்தா, “இங்கு சட்டமன்றத்தில் காங்கிரஸுக்கு ஒரு சீட் கூட இல்லை. இருப்பினும் நான் எப்போதும் அவர்களுக்கு உதவவே விரும்பினேன். சி.பி.எம் கட்சியுடன் கூட்டணி வேண்டாம், 2 சீட் தருகிறேன் என்று அவர்களிடம் கூறினேன். ஆனால், காங்கிரஸ் என் பேச்சைக் கேட்காமல், சி.பி.எம் கட்சியுடன் சென்று சீட் பகிர்வு செய்துகொண்டது. இப்போது சி.பி.எம்மிடம் நான் சரணடைய வேண்டுமா… இந்தத் தேர்தல் மேற்கு வங்க அரசைத் தீர்மானிக்கும் தேர்தல் அல்ல, டெல்லியில் மோடியை வீழ்த்துவதற்கான தேர்தல். அதனால் ஒருங்கிணைக்கப்பட்ட வாக்குகள் வேண்டும்.

மம்தா பானர்ஜி

ஆனால், காங்கிரஸ் இங்கு தனது வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது. ஏனெனில், காங்கிரஸ், சி.பி.எம் இங்கு பா.ஜ.க-வின் இரு கண்களாக இருக்கிறது. ராய்கஞ்ச், முர்ஷிதாபாத் தொகுதிகளிலும் இதே நிலைதான். நீங்கள் காங்கிரஸ் அல்லது சி.பி.எம் கட்சிக்கு வாக்களித்தால், அது பா.ஜ.க-வுக்கு எதிரான வாக்குகளைக் குறைத்து மோடிக்கு உதவுவதற்குச் சமம். இங்கு, காங்கிரஸ் மற்றும் சி.பி.எம் தலைவர்கள் பா.ஜ.க-வின் அதே குரலில் பேசுகிறார்கள். அதோடு, திரிணாமுல் காங்கிரஸ் அரசின் மக்கள் சார்பு கொள்கைகளுக்கு எதிராகச் சதி செய்கிறார்கள். பா.ஜ.க வெற்றிபெற்றால் மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். எனவே, அவர்கள் என்ன சொன்னாலும் அவர்களின் வலையில் சிக்காதீர்கள்” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.