கடந்த 1949-ல் சீனா, ஜிங்ஜியாங் பிரதேசத்தை ஆக்கிரமித்தது. இதனால், காலங்காலமாக பாகிஸ்தான் – சீன எல்லையான உய்குர் பகுதியில் சுதந்திரமாக வாழ்ந்துவந்த இஸ்லாமிய மக்கள், தங்கள் உரிமைகளை இழந்தனர். கடந்த 2009-ல் ஏற்பட்ட இனக்கலவரத்துக்குப் பின் அவர்கள் நிலைமை மேலும் பரிதாபமானது. உய்குர் இஸ்லாமியர்களைப் பிரிவினைவாதிகளாக சித்திரித்த சீனா, அவர்கள்மீது அடக்குமுறை களை தீவிரப்படுத்தியது.

இதனிடையே உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்த வருடாந்திர அறிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் உலக நாடுகளின் மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான அறிக்கையில், “சீனாவில் கருத்துச் சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடுகள், சிறுபான்மை இனக் குழுக்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

உய்குர் மக்கள்

இனப்படுகொலை, மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்கள் பெரும்பான்மையான முஸ்லீம் உய்குர்கள் மற்றும் சின்ஜியாங்கில் உள்ள பிற இன மற்றும் மத சிறுபான்மை குழுக்களுக்கு எதிராக அடக்குமுறை இந்த ஆண்டில் அதிகம் நடந்திருக்கிறது. சீன அரசு 2017 முதல் 2023 வரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர் இன மக்களையும் மற்ற முஸ்லிம் சிறுபான்மை குழுக்களின் உறுப்பினர்களையும் கைது செய்து தடுத்து வைத்திருக்கிறது.

சுதந்திரமான நீதித்துறை இல்லாதது, நீதித்துறை, சட்ட அமைப்பின் மீது கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாடு, அரசியல் கைது நடவடிக்கைகள், பிற நாடுகளில் தனிநபர்களுக்கு எதிரான அடக்குமுறை, தொழில்நுட்ப கண்காணிப்பு உட்படத் மனித உரிமை மீறல் முதல் தனி மனித உரிமை வரைசீன அரசின் தலையீடு அதிகமாக இருக்கிறது. கருத்துச் சுதந்திரம், இணையதளச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மீதான கடுமையான கட்டுப்பாடுகள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், பதிவர்கள், அரசின் மீதான அதிருப்தியாளர்கள் உள்ளிட்டவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் தொடரப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.