ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் (ICICI Bank), எஸ் பேங்க் (Yes Bank) ஆகிய தனியார் வங்கிகள் சேமிப்புக் கணக்குகளுக்கான கட்டணங்களை மாற்றியுள்ளன. புதிய கட்டணங்கள் மே 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருக்கின்றன.

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் கட்டணங்கள்:

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் இனி டெபிட் கார்டுகளுக்கு ஆண்டுக் கட்டணம் வசூலிக்க இருக்கிறது. கிராமப்புறங்களில் ஆண்டுக்கு 99 ரூபாயும், மற்ற இடங்களில் ஆண்டுக்கு 200 ரூபாயும் டெபிட் கார்டு ஆண்டுக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

காசோலைகளை பொறுத்தவரை ஒரு ஆண்டில் முதல் 25 காசோலைகளுக்கு கட்டணம் இல்லை. அதன்பிறகு ஒவ்வொரு காசோலைக்கும் 4 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

ICICI bank

வங்கியில் பணப் பரிவர்த்தனைக்கும் கட்டணம் மாற்றப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு தொடங்கப்பட்ட கிளையில் (Home branch) மாதத்துக்கு 3 முறை இலவசமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். அதற்கு மேல், ஒவ்வொரு முறையும் 1 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை இலவசம். 1 லட்சம் ரூபாய்க்கு மேல் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

மற்ற கிளைகளில் (Non Home branch) ஒவ்வொரு நாளும் 25,000 ரூபாய் வரை இலவசமாக பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். அதற்கு மேல் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். மூன்றாம் நபர் பரிவர்த்தனைகளுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

டி.டி (Demand Draft), பி.ஓ (Pay Order) ஆகியவற்றை ரத்து செய்வதற்கும், டூப்ளிகேட் பெறுவதற்கும் 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்

ஐ.எம்.பி.எஸ் (IMPS) மொபைல் பரிவர்த்தனைகளுக்கு 1000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு 2.50 ரூபாய் கட்டணம்; 1001 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை 5 ரூபாய் கட்டணம்; 25,000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனைக்கு 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். பணம் செலுத்தும்போது மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். பணம் பெறுவதற்கு கட்டணம் இல்லை.

போட்டோ அத்தாட்சி, கையெழுத்து அத்தாட்சி ஆகியவற்றுக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

எஸ் பேங்க் கட்டணங்கள்:

எஸ் பேங்க் Savings Exclusive, YES Savings Select/XLRATE SA, Savings Advantage/ Yes Grace/ Yes Prosperity Prime/ Ascent/ Crest, Yes Respect, Savings PRO ஆகிய சேமிப்பு கணக்குகளை நிறுத்திவிட்டது. இந்தக் கணக்குகளை இனி தொடங்க முடியாது.

யெஸ் பேங்க்

மினிமம் பேலன்ஸ்:

Savings Account PRO Max கணக்குக்கு 50,000 ரூபாய், Savings Account Pro Plus/ Yes Essence SA, Yes Respect SA ஆகிய கணக்குகளுக்கு 25,000 ரூபாய், Savings Account PRO கணக்குக்கு 10,000 ரூபாய், Savings Value கணக்குக்கு 5,000 ரூபாய், My First YES கணக்குக்கு 2,500 ரூபாய் என மினிமம் பேலன்ஸ் தொகை பராமரிக்கப்பட வேண்டும்.

சேவைக் கட்டணங்கள்:

மினிமம் பேலன்ஸ் பராமரிக்கப்பட்டால் கட்டணம் இல்லை. மினிமம் பேலன்ஸ் தொகையில் 50% மேல் பராமரிக்கப்பட்டால், மீதமுள்ள தொகையில் 5% கட்டணமாக வசூலிக்கப்படும்.

மினிமம் பேலன்ஸ் தொகையில் 50% தொகைக்கு குறைவாக பராமரிக்கப்பட்டால், மீதமுள்ள தொகையில் 10% கட்டணமாக வசூலிக்கப்படும்.

டெபிட் கார்டு ஆண்டுக் கட்டணம்:

Element Debit Card : 299 ரூபாய்

Engage Debit Card : 399 ரூபாய்

Explore Debit Card : 599 ரூபாய்

Rupay Debit Card (கிசான் கணக்குக்கு மட்டும்) : 149 ரூபாய்

ஏ.டி.எம் பரிவர்த்தனை:

முதல் 5 பரிவர்த்தனைகள் இலவசம். அதற்கு மேல் ஒவ்வொரு முறையும் 21 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். பணம் அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ஒவ்வொரு முறையும் 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.