ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் தொடர்பாக இஸ்ரேல் – ஹமாஸ் குழுவுக்கு இடையே தொடங்கிய போர் இன்றளவும் நீடிக்கிறது. இந்த போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைபாட்டில் இருந்த இரான், பாலஸ்தீனத்துக்கு உதவி வந்தது. மேலும் போரை நிறுத்தும்படி இஸ்ரேலை எச்சரித்தும் வந்தது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக ஏப்ரல் 1-ம் தேதி சிரியாவில் இருந்த இரான் தூதரகம்மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ ஜெனரல்கள், ராணுவ அதிகாரிகள் சிலர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இதனால் கடும் கோபமடைந்த இரான், இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தத் திட்டமிடுவதாக அமெரிக்கா இஸ்ரேலை எச்சரித்தது. அதைப்போலவே, நேற்று இஸ்ரேல்மீது இரான் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதல் குறித்து விளக்கமளித்த ஐ.நா சபைக்கான இரானின் நிரந்தர தூதுக்குழு, “சட்டபூர்வமான பாதுகாப்பு தொடர்பான ஐ.நா சாசனத்தின் 51 வது பிரிவின் அடிப்படையில், இரான் எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.

இரான் குடியரசு ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கான உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகிறது, அதே நேரம் இரானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, தேசிய நலன்களைப் பாதிக்கும் எந்த ஒரு சட்டவிரோத சக்திகளுக்கும், ஆக்கிரமிப்புகளுக்கும் எதிராக எங்கள் நாட்டை பாதுகாப்பதற்கான உறுதியையும் வலியுறுத்துகிறது.

இரான் தாக்குதல்

இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க இரானுக்கு முழு உரிமையும் இருக்கிறது. இந்த மோதலில் இஸ்ரேல் மற்றுமொரு தவறு ஏதேனும் செய்தால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இது முழுக்க முழுக்க இரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல். இதில் அமெரிக்கா தலையிட வேண்டாம். விலகி இருப்பதே நல்லது” எனத் தெரிவித்திருக்கிறது.

ஆனால், இரானின் வான்வழித் தாக்குதலை முறியடிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா கூடுதல் ஐயன் டோம் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கியிருக்கிறது. அதே நேரம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும் இரானைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. பிரிட்டனும் இஸ்ரேலுக்கு ஆதரவாக, ரைப்ரஸ் தீவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டன் போர் விமானங்களை அனுப்பி வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஜோ பைடன்

இன்னொரு பக்கம் இரானுக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரும் போராக மாற அனைத்து சாத்தியக்கூறுகளும் இருப்பதாக வல்லுநர்கள் அஞ்சுகிறார்கள். இந்த நிலையில், இது குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது. இதில், இரானின் பாதுகாப்புப் படையைத் தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தும் எனக் கூறப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.