ஒருவர் ஓடுவதைப் போல மற்றொருவரால் ஓட முடிவதில்லை. இந்த வித்தியாசத்தை தடகள வீரர்களின் (athlete) ஓட்டத்திலும் காண முடியும். இதற்கு `ஸ்பீட் ஜீன்’ (Speed Gene) ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

இதற்காக தடகளத்தில் ஜீன்களின் பங்கு என்ன என்பது குறித்து இங்கிலாந்தில் உள்ள எசெக்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். விளையாட்டு விஞ்ஞானியான ஹென்றி சுங் மற்றும் அவரின் குழுவினர் இணைந்து, 20 – 40 வயதுக்குட்பட்ட 45 பிரிட்டிஷ் ஆண்கள் மற்றும் பெண்களின் டிஎன்ஏவை பரிசோதனை செய்தனர். 

Athlete (Representational Image)

ஆய்வில் பங்கேற்றவர்கள் எட்டு வாரங்களுக்கு, வாரத்திற்கு மூன்று முறையென 30 நிமிடங்கள் ஓட வைக்கப்பட்டனர். எட்டு வாரங்களுக்குப் பிறகு ஏரோபிக் ஃபிட்னெஸின் அளவீட்டின் படி, இவர்கள் இதய சுவாச பிட்னெஸ் (cardio respiratory fitness) 10% முன்னேற்றத்தைக் கண்டிருக்க வேண்டும். 

ஆனால், இங்கு தான் ஒரு பெரிய வித்தியாசத்தை விஞ்ஞானிகளால் காண முடிந்தது. சிலர் 20% மட்டுமே முன்னேறி இருந்தனர், சிலரில் இது 5%-ஆக மட்டுமே இருந்தது. இன்னும் சிலரில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. 

மரபணு

அதன்பின் குழு தடகள வீரர்களின் மரபணுவகை பகுப்பாய்வு (genotype analysis) செய்யப்பட்டது. விளையாட்டு வீரர்களில் 3,000க்கும் மேற்பட்ட வெவ்வேறு ஜீன்கள் இருந்தன. அவர்களில் குறிப்பிட்ட 19 ஜீன்கள் தொடர்ச்சியாக வந்திருந்தன. 

20% முன்னேற்றத்தைக் கண்ட அனைவரிலும் இந்த 19 ஜீன்கள் இருந்தன. முன்னேற்றம் காணாத வீரர்களுக்கு இந்த ஜீன்களில் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே இருந்துள்ளன. 19 ஜீன்களில் போர்வீரர் ஜீனும் (warrior gene) இருந்துள்ளது. இதனை மோனோஅமைன் ஆக்சிடேஸ் ஏ மரபணு (MAOA) என்றும் அழைக்கின்றனர். இந்த ஜீன் ரிஸ்க் டேக்கிங் நடத்தையோடு தொடர்புடையது. ஓட வேண்டும், நகர வேண்டும் என்ற உள்ளுணர்வை இந்த ஜீன் அனுமதிக்கிறது. 

எனவே, ஒட்டப்பந்தய வீரர்களின் வேகத்திற்கு ஜீன்களின் பங்கு முக்கியமானது என்பதை குழு அறிந்தது.  

ஸ்பீட் ஜீனுக்கும், விளையாட்டிற்கும் உள்ள தொடர்பென்ன?!…

ACTN3 என அழைக்கப்படும் ஸ்பீட் ஜீன், ஆல்ஃபா-ஆக்டினின்-3 என்ற புரதத்தை என்கோட் (Encode) செய்கிறது. தசைநார்களில் வேகமாக இழுக்கும் போது மட்டுமே இந்தப் புரதம் வெளிப்படுத்தப்படும். 

எலும்பு தசைகள் நூற்றுக்கணக்கான, சில நேரங்களில் ஆயிரக்கணக்கான தசை நார்களால் ஆனது. அவை ஒன்றாகத் தொகுக்கப்பட்டு இணைப்பு திசுக்களில் மூடப்பட்டிருக்கும். இந்த எலும்பு தசை நார் எவ்வளவு வேகமாகச் சுருங்குகிறது என்பதைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது. 

DNA

நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களில் `டைப் I’ அல்லது `ஸ்லோ ட்விச்’ (slow-twitch) தசைநார்கள் இருக்கும். அதுவே பளு தூக்குபவர்கள் மற்றும் குறைந்த தூரம் ஓடும் தடகள வீரர்களில் `டைப் II’ அல்லது `ஃபாஸ்ட்-ட்விச்’ (fast-twitch) தசைநார்கள் இருக்கும்.

விளையாட்டின் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய 200க்கும் மேற்பட்ட வெவ்வேறு ஜீன் மாறுபாடுகள் உள்ளன. இவற்றில் குறைந்தது இருபதாவது சிறந்த தடகள வீரராக இருக்க உதவுகின்றன. 

ஆனால், இவை இருந்தால் மட்டும் ஒருவர் சிறந்த தடகள வீரராக மாற முடியாது. அது பயிற்சி, சுற்றுச்சூழல் என அனைத்தையும் உள்ளடக்கி இருக்க வேண்டும் என ஆராய்ச்சி குறிப்பிட்டுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.