வந்துட்டு பிப்ரவரி 14… எந்த சோஷியல் மீடியா பக்கம் போனாலும் கமிட்டடு தொல்லைகள் தாங்க முடியாது. என்னவோ இவங்க மட்டும்தான் கமிட் ஆயிருக்குற மாதிரியும், ஊரு உலகத்துல யாருமே லவ் பண்ணாத மாதிரியும் வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ், இன்ஸ்டாகிராம்ல ஸ்டோரின்னு கமிட்டடோட அட்டகாசம் தாங்கவே முடியாது.

கமிட்டட் தொல்லைகள் தாங்க முடியாது…

இதைப் பாக்குற சிங்கிள்ஸ் ‘உங்க திமிரை எல்லாம் அடக்க ஒருத்தன் வருவான்’ன்னு நரம்பெல்லாம் புடைக்க மைண்ட் வாய்ஸ்ல சொல்லிட்டு சுத்தினாலும் யாரும் வரமாட்டாங்ன்றது தான் கசப்பான உண்மை. அதனால ஃபேமஸ் ஆன நாலு புரொபோசல் சீன்களை அலசி ஆராய்ஞ்சு, நறுக்குன்னு கேட்டு, நம்ம கோர்ட்டுல தீர்ப்பு சொல்வோம் வாங்க…

வாதம்: இந்தப் படம் வந்ததுல இருந்து ‘ச்சே…என்னம்மா லவ் சொல்றான் பாரு… பெஸ்ட் புரொபோசல் சீன்’னு இந்த சீனுக்கு ஒரு ஃபீல் இருந்துகிட்டே இருக்கு. அப்படி என்னங்கய்யா இது பெஸ்டு? விரும்பலயாம், ஆசப்படலயாம், நினைக்கலயாம்…ஆனா இதெல்லா நடந்திருமோன்னு பயமா இருக்காம். அதுதான் எதுவுமே இல்லையே அப்புறம் எதுக்கு இதெல்லாம் வந்து சொல்லணும்… அதுவும் சில நொடிகள்ல கிளம்பப்போற டிரெயின் முன்னாடி நின்னுகிட்டு.

அலைபாயுதே

முக்கியமா ஹீரோவுக்கு நடந்துருமோனு பயம் தான்…ஆனா இன்னும் நடக்கல. ஒருவேள ஹீரோ சொல்றத ஹீரோயின் சீரியஸா எடுத்துகிட்டு யோசிச்சு, ஹீரோயினுக்கு லவ் வந்து, ஹீரோவுக்கு அவரு சொன்னதெல்லாம் நடக்கலைன்னா என்னவாகும்?

தீர்ப்பு: அதனால ஹீரோவுக்கு லவ் வந்து உறுதியான பிறகு தான், ஹீரோயினுக்கு லவ் சொல்லியிருக்கணும். எதுவா இருந்தாலும் லாஜிக் ரொம்ப முக்கியம் பாஸ். தீர்ப்பு என்னன்னா ஹீரோ இந்த வருஷ காதலர் தினத்துக்கு ஆளோட இல்லாம, ஆளே இல்லாம இருக்க சிங்கிள் ஃபிரெண்ட்ஸ் கூட தான் கொண்டாடனும்.

வாதம்: ஹாய் மாலினி… ஐ ஆம் கிருஷ்ணன்… வரைக்கும் எல்லாம் ஓகே தான். நா இத சொல்லியே ஆகணும்ங்கறதுல இருந்து தான் பிரச்னை. ஒரு பொண்ணு புதுசா உங்கள இப்போ தான் பாக்குது. உடனே இப்படி வந்து சொல்றது சரியா? இதே சம்பவம் உண்மையா நடந்தா என்ன ஆயிருக்கும்? ஒண்ணா ஈவ் டீசிங் கேஸ்ல உள்ள போயிருப்பீங்க… இல்லேன்னா அந்தப் பொண்ணுகிட்ட கன்னத்துல ஒரு அறை வாங்கியிருப்பீங்க.

வாரணம் ஆயிரம்

அடுத்ததா, ‘இங்க எவனும் இவ்வளவு அழகா ஒரு… இவ்வளவு அழகை பாத்திருக்கவே மாட்டாங்க’ – இது உங்களுக்கு எப்படி தெரியும் மிஸ்டர் கிருஷ்ணன். நீங்க எதாவது சர்வே எடுத்தீங்களா? அது எப்படி நீங்க அவ்வளவு அடிச்சு சொல்ல முடியும். எவிடன்ஸ் இஸ் மஸ்ட் மிஸ்டர் கிருஷ்ணன்.

தீர்ப்பு: எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் சபையில், ஒரு பெண்ணின் மனதில் சில விஷயங்களைப் பதிய வைத்ததால் மாலினியை இந்த புரொபோசலை நிராகரிக்கச் சொல்லி இந்த கோர்ட் உத்தரவிடுகிறது.

வாதம்: என்னைப் பொறுத்தவரைக்கும் ஹீரோ சொன்ன டயலாக்குகளை கூட மன்னிச்சு விட்ரலாம். ‘எனக்கு உன்ன பிடிச்சிருக்கு…உனக்கு என்ன பிடிச்சிருக்கா…இல்லையா? பிடிச்சிருந்தா ஓகே, பிடிக்கலைன்னா லாஸ் அவளுக்கு’ங்கற ஒரு விஷயத்துக்கு தேவையே இல்லாம அத்தனை சீரியல் பல்ப் கட்டி, அதை ஆன் பண்ணிவிட்டு மின்சாரத்தை விரயம் ஆக்கியிருக்காரு.

ரெமோ

அடுத்து டயலாக்குக்கு வருவோம்…உன்ன கண்டுபிடிக்கறதுக்கு 27 வருஷம் ஆயிடுச்சுன்னா 27 வருசமா ஹீரோ ஒரு வேலையையுமே பாக்காம இதையவே ஒரு வேலையா பாத்துகிட்டு பூமிக்கு பாரமா இருந்திருக்காரு. அப்போ உங்க அம்மா, அப்பா உங்களை வளர்த்ததே வேஸ்டா கோபால்?

தீர்ப்பு: பொது சொத்துக்கு குந்தகம் விளைவித்ததற்காகவும், 27 வருஷம் பூமிக்கு பாரமாக இருந்ததற்காகவும் இனி இவர் வீட்டுக்கு எந்த காலத்துலயுமே கரன்ட் தரக்கூடாதுன்னு மின்சார வாரியத்திற்கு உத்தரவிடப்படுகிறது.

வாதம்: சும்மா ஒரு பேச்சுக்கு மைக் போட்டு ஊர கூப்பிட்டு சொல்லுன்னு அந்தப் பொண்ணு சொல்லுச்சுனா உடனே மைக்க பிடிச்சுடுவாங்களா? அந்தப் பொண்ணு சொன்னதை நிறைவேத்தனும் நினைச்சா மிஸ்டர் கார்த்திக்குக்கு அதே காலேஜ்ல சிங்கிளா இருக்கவங்களை பத்தி நினைக்கத் தோணல. இப்படி தானும், தன் காதலி மட்டும் நல்லா இருக்கணும்னு நினைக்குற உங்கள மாதிரி ஆளுங்க இருந்தா இந்தச் சமுதாயம் எப்படி முன்னேறும் மிஸ்டர் கார்த்திக்?

மௌன ராகம்

தீர்ப்பு: சிங்கிள்ஸோட இதயத்தை நொறுக்கியதுக்காக மனித உரிமை கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது இடத்தில் இப்படி நடந்துக்கொண்டதால் பப்ளிக் நியூசன்ஸ் கேஸும் ஃபைல் செய்யப்படுகிறது.

குறிப்பு: இதைப் படிக்கும்போது கமிட்டட்களுக்கும் ‘இதெல்லாம் வயித்தெரிச்சல்’ன்னு தோணும். ஆமா..இது சுத்தமான, காத்திரமான, வெறித்தனமா வயித்தெரிச்சல் தான். இதெல்லாம்…இல்லனா இதுல பாதியாவது நமக்கு நடந்திடாதான்னா ஏக்கத்தோட கடக்குற சிங்கிள்ஸ் இப்படி எதாவது பேசியாவது மனசை ஆத்திக்கலாம்னு தான் நினைப்போம். இப்படிபட்ட பாவமான சிங்கிள்ஸை வெறுப்பேத்தாம நீங்க உண்டு, உங்க ஆளு உண்டுன்னு காதலர் தினத்தை சிங்கிள்ஸுக்கு தொந்தரவு இல்லாம இருந்துக்கோங்க கமிட்டடு மக்களே…

வயித்தெறிச்சல் தான்…

அப்புறம் சிங்கிள்ஸ் மக்களே…Cringe-ஆ இருக்குன்னு இதைத் தவிர்த்திடாம, நீங்களும் ஏதாவது லவ் புரொபோசல் சீனை கமென்ட் பண்ணி, அதை நாலு கேள்வி கேட்டுட்டு போகவும் மக்களே…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.