இது இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும்…

“இது இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். 2024 மக்களவைத் தேர்தல் முடிந்து, மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, முழு அளவிலான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வோம்” -மத்திய இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ்.

திரௌபதி முர்முவை சந்தித்த நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மாநில அமைச்சர்கள் பகவத் கிஷன்ராவ் கரட், பங்கஜ் சவுத்ரி மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன், ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்தார்.

ஒப்புதல் வழங்கப்பட்டது..

பிரதமர் மோடியில் தலைமையில் நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை வாசிக்க உள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தில் முதல் பட்ஜெட்!

புதிய நாடாளுமன்றத்தில் முதல் பட்ஜெட்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுவரை தொடர்ச்சியாக 5 முழுமையான பட்ஜெட் மற்றும் ஒரு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதன்மூலம், முன்னாள் பிரதமர் மொராஜி தேசாயின் சாதனையை அவர் முறியடிக்க உள்ளார். மொராஜி தேசாய், 1959-1964க்கு இடைப்பட்ட காலத்தில் 5 வருடாந்திர பட்ஜெட் மற்றும் ஒரு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அதேபோல் முன்னாள் நிதியமைச்சர், பிரதமருமான மன்மோகன் சிங், அருண் ஜெட்லி மற்றும் ப. சிதம்பரம் உள்ளிட்டோரின் சாதனையையும் அவர் முறியடிக்கிறார்.

நடப்பு ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நிர்மலா சீதாராமனின் இந்த இடைக்கால பட்ஜெட் வெகுஜன எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது…

மத்திய இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்குவதற்காக மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. பிரதமர் மோடியில் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு ஒப்புதல் தரப்படும். அதன் பின்னர் பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை வாசிப்பார்.

இடைக்கால பட்ஜெட்

மத்திய பட்ஜெட் 2024

2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் சில மாதங்களில் நடக்க உள்ள நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இன்று மத்திய இடைக்கால ‘பட்ஜெட் 2024-2025’ நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகவுள்ள நிலையில், சென்செக்ஸ் 102 புள்ளிகள் அதிகரித்து 71,854 புள்ளிகள் அதிகரித்தும், நிஃப்டி 23 புள்ளிகள் அதிகரித்து 21,742 புள்ளிகளை தாண்டியும் வர்த்தகமாக ஆரம்பித்திருக்கிறது.

கடந்த ஆண்டு மத்தியெ பட்ஜெட் 2023 – 2024 வாசிக்கப்பட்ட இதே நாளில் சென்செக்ஸ் 443 புள்ளிகள் அதிகரித்து 60,000 புள்ளிகளை தாண்டியும், நிஃப்டியும் 130 புள்ளிகள் அதிகரித்து 17,815 புள்ளிகளை தாண்டியும் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.