கார்த்திகை அமாவாசை நாளில் மகாகாளி அவதரித்த 12-12-2023 செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு மேல் சக்தி விகடனும் தாராசுரம் வீரபத்திரர் ஆலய நிர்வாகமும் இணைந்து நிகும்பலா யாகம் நடத்தவுள்ளது.

நிகும்பலா யாகம்

இந்த யாகத்தில் சங்கல்பம் செய்து கொண்டால், பறிபோன சொத்துக்கள் கிடைக்கும். இழந்த பதவி கிடைக்கும், வம்பு, வழக்குகள் எதிரிகள் தொல்லை நீங்கும். உத்தியோக உயர்வு கிடைக்கும். அவமானங்கள் நீங்கும். தீய வழியில் சென்ற குடும்ப உறவுகள் மனம் திருந்துவர். புதிய வேலை வாய்ப்பு, வியாபார விருத்தி, தொழில் அபிவிருத்தி உண்டாகும். திருமணம், பிள்ளைப்பேறு, கிரகப்ரவேஸம் போன்ற சுபகாரியங்களில் இருந்த தடைகள் விலகி நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மனமொன்றி அமாவாசையில் இந்த நிகும்பலா யாகத்தில் பங்கேற்றால் தீமைகள் எல்லாம் விலகி நன்மையே நடக்கும். அபூர்வ மூலிகைப் பொருட்கள், நவதான்யம், பழவகைகள், கஸ்தூரி மஞ்சள், குங்குமம், நெல்லிக்கனி, எலுமிச்சை, பசும் பால், தேன், நெய், மிளகாய், பூசணிக்காய், கொப்பரைத் தேங்காய், கல்கண்டு, நெய்கலந்த வெண்சாதம், பூக்கள், வஸ்திரங்கள் என 64 வகை பொருள்களால் செய்யப்படும் இந்த யாகத்தால் அன்னை பத்ரகாளி மகிழ்ந்து வேண்டிய வரங்களை அருள்வாள் என்பது ஆன்மிகம் கூறும் தகவல்.

அது சரி தாராசுரம் ஸ்ரீபத்ரகாளி உடனான ஸ்ரீவீரபத்திரர் ஆலயத்தில் ஏன் இந்த யாகம் நடத்தப்பட வேண்டும்!

நிகும்பலா யாகம்

இங்கு தான் மகாபத்திரகாளி சாந்தசொரூபியாக நின்று ஒட்டக்கூத்த பெருமானுக்கு அருளினார். கவிக்கொண்டல், கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன், சதுர்கவி, காளக்கவி, சர்வஞ்ஞகவி, கௌடப்புலவர் என்றெல்லாம் போற்றப்படுபவர் ஒட்டக்கூத்த பெருமான். உலாவுக்கு ஒரு ஒட்டக்கூத்தன் என்று புகழப்பட்டவர். காளிக்கு கூளி கூறியதாக வர்ணிக்கப்படும் தக்கயாகப் பரணியை இவர் பாடியவிதம் கேட்டு தாராசுரத்தில் ஆவேச ரூபங்களான காளிதேவியும் வீரபத்திரரும் ஆவேசம் தணிந்து சிரித்த முகத்துடன் காட்சி தந்து ஆசிர்வதித்தனர். தக்காய பரணியின் சிறப்பையும் இவரது கவிபாடும் ஆற்றலைக் கண்ட குலோத்துங்க சோழன், கூத்தனூர் என்னும் ஊரையேப் பரிசாகக் கொடுத்தார். ஒட்டக்கூத்தரின் மறைவுக்குப் பிறகு அவர் வாழ்ந்து வழிபட்டு வந்த ஸ்ரீவீரபத்திரர் கோயிலிலேயே அவருக்கு ஜீவசமாதி எழுப்பப்பட்டது.

தாராசுரம் வீரபத்திரர் ஆலயம்

இம்..என்றால் ஏழாயிரம் கவிகள் எழுதும் ஒட்டக்கூத்தரின் அருள் நிறைந்த தலம் இது. ஒட்டக்கூத்தருக்கு அருள் செய்த வீரபத்திரர் கருவறையில் நின்ற கோலத்தில் வாள், கேடயம், வில், அம்பு ஆகியவற்றை நான்கு கரங்களிலும் பிடித்த நிலையில் காட்சி தருகிறார். அருகே தனி சந்நிதியில் மந்தகாசப் புன்னகையோடு காளிதேவியும் அருள்கிறாள். இந்த ஆலயம் பஞ்ச குரோசத் தலங்களில் ஒன்று என்கிறார்கள். இது காசிக்கு நிகரான தலமும்கூட. இங்கு வந்து வழிபட்டால் பித்ரு சாபங்களும் தோஷங்களும் நீங்கும் என்பதும் சிறப்பு. சிறப்பினும் சிறப்பாக இங்கே அருள் பாலித்து வரும் பத்ரகாளியம்மன் தெற்கு நோக்கி இருப்பதும் அவள் இருக்கும் பகுதியில் இருந்து ஈசானிய மூலையில் மயானம் இருப்பதும் சிறப்பாகும்.

தாராசுரம் வீரபத்திரர்

காளிதேவி அவதரித்த கார்த்திகை அமாவாசையில் சக்தி விகடன் வாசகர்களின் எல்லா பிரச்னைகளும் தீர்ந்து வாழ்வில் ஏற்றம் பெற 12-12-2023 – செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு மேல் சக்தி விகடனும் தாராசுரம் வீரபத்திரர் ஆலய நிர்வாகமும் இணைந்து நிகும்பலா யாகம் நடத்தவுள்ளது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

ராமாயண, மகாபாரத காலம்தொட்டே நடத்தப்படும் இந்த நிகும்பலா யாகத்தால் எல்லாவித தீமைகளும் விலகி நன்மைகள் உண்டாகும். குறிப்பாக அகால விபத்து, திடீர் ஆபத்து, கெட்ட சொப்பனங்கள், அச்சம் எல்லாம் நீங்கும். மகாகாளி, பிரத்யங்கரா தேவி, நிசும்பசூதனி, வராஹி ஆகிய உக்கிர தெய்வங்களைப் போற்றி செய்யப்படும் இந்த யாகத்தால் சகல தோஷங்களும் பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. அமாவாசை இரவில் பிரத்யேக ஹோம திரவியங்களால் செய்யப்படும் இந்த யாகத்தால் உங்களைச் சூழ்ந்துள்ள துன்பங்கள் நிச்சயம் விலகும். உங்கள் குடும்பமும் சுற்றமும் நட்பும் சிறப்புடன் வாழ இந்த விசேஷ யாகத்தில் கலந்து கொள்ளுங்கள். தர்மம் உள்ளவரிடத்தில் அவர்களைக் காக்கும் அக்னி ரட்சையாக இந்த யாகம் விளங்குகிறது.

தாராசுரம் வீரபத்திரர்

இந்த நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டு பெறப்படும் புனித ஹோம பஸ்பம் மகிமை வாய்ந்தது. இதைப் பெற்று உங்கள் பூஜையறையில் வைத்து, மகாகாளியை தியானித்து நம்பிக்கையோடு நெற்றியில் பூசி வரவேண்டும். இதனால் 48 நாள்களுக்குள் உங்கள் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும். செய்வினை, வழக்குகளில் சிக்கல், எதிரிகள் அச்சம், மரண பயம் உள்ளிட்ட எல்லா அச்சங்களும் நீங்கிவிடும்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோம பஸ்பம், மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.