திட்டங்களுக்கு நிதியில்லை… கார் பந்தயத்துக்கு ரூ. 42 கோடியா?! – எடப்பாடி

ஒரு நபரின் தவறுக்கு அமலாக்கத்துறையை மோசம் என்பதா?! 

திருவள்ளூர், செங்லப்பட்டு மாவட்டங்களில் திங்கள் அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

“12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்” – வானிலை ஆய்வு மையம் 

தமிழகத்தில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. திருவள்ளுர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், “வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தென்மேற்கு வங்கக்கடலில் சென்னையில் இருந்து சுமார் 630 கி.மீ. கிழக்கு – தென் கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நிலை கொண்டுள்ளது. இது நாளை புயலாக வலுப்பெற்று நாளை மறுநாள் காலை தெற்கு ஆந்திரா, அதனை ஒட்டிய வட தமிழக – புதுவை கடலோர பகுதிகளில் நிலவக்கூடும். டிச.5ல் நெல்லூருக்கும் மசிலிப்பட்டணத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கக்கூடும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamil News Today Live: “Good friends at COP28..!’ – இத்தாலிய பிரதமர் பகிர்ந்த #Melodi ட்வீட்

சர்வதேச காலநிலை நடவடிக்கைக்கான உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி துபாய் சென்றிருந்தார். உலக நாடுகள் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வு உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது.

சர்வதேசத் தலைவர்கள் பலரும் வருகை தந்த ஐ.நா.வின் COP28 மாநாட்டின் ஒருபகுதியாக நடைபெற்ற சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு அதிக கவனம் பெற்றுள்ளது.

COP28 காலநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் எடுத்த செல்ஃபியை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். `Good friends at COP28. #Melodi’ என அவர் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.