உணவின்றி அமையாது உலகு.. அதனால்தான்,  வேளாண் மற்றும் உணவுதொடர்பான படிப்புகளுக்கும், தொழில்களுக்கும் எப்போதும் மவுசு இருந்துகொண்டே இருக்கிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்,  உணவு மற்றும் பால் பல தொழில்நுட்பக் கல்லூரியில், “வேளாண் மற்றும் கால்நடை சார்ந்த படிப்புகள் குறித்த கருத்தரங்கம் – 2023” கடந்த 23 ம் தேதி நடைபெற்றது.

நிகழ்வில்…

இதில் 140-க்கும் மேற்பட்ட  11, 12 ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களும், இவர்களுக்கு வழிகாட்டல் வழங்க,  உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர் குமாரவேலு, பேராசிரியர் டாக்டர். முருகன், சவீதா பொறியியல் கல்லூரியின் உதவி பேராசிரியர், முனைவர். கணபதி மற்றும் கோயம்புத்தூர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், உதவி பேராசிரியர் முனைவர். சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முனைவர் முருகன்

உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர், என்.குமாரவேலு, “திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் பள்ளிகளில் இருந்து பெரும்பாலும் மாணவர்களுக்கு கால்நடை பல்கலைகழகம் இருப்பது தெரியவில்லை. அனைவருமே நீட், மருத்துவப் படிப்பு என ஓடிக்கொண்டிருக்கிறோம். இங்கு கூடியிருக்கும் மாணவர்களுக்கு மேற்படிப்புற்காக ஒரு வழிகாட்டல் வழங்கவே இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் பயன்பெறுவீர்கள் என் நம்புகிறேன்” என்றார்.

மாணவர்களுக்கு வழிகாட்டல் வழங்க வந்த முனைவர் சண்முகசுந்தரம் மற்றும் முனைவர் கணபதி, வேளாண் சார்ந்த பட்டப்படிப்புகள் மற்றும் அதன் வேலை வாய்ப்புகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துக்கூறினர்.

முனைவர். கணேசன்

விவசாயம் மற்றும் உணவுதான் ஒரு மனிதனின் அடிப்படை தேவை. அது இப்போது மக்கள், பட்டப்படிப்பாக எடுத்து படிப்பதில் பெரிதளவில் ஈடுபாடு காட்டி வருகின்றனர். வேளாண் சார்ந்த பட்டப்படிப்புகள் மற்றும் அதற்கான வேலை வாய்ப்புகள் தமிழ்நாடு மட்டுமல்லாமல், உலகளாவிய அளவில் பெரிதாக உள்ளது. மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்கு சமமான பட்டப்படிப்பாகவே வேளாண் சார்ந்த பட்ட படிப்புகளும் கருதப்படுகிறது. வேளாண் பல்கலைக்கழகத்திலிருந்து கால்நடை பிரிந்தது. தற்போது கால்நடை பல்கலைக் கழகத்திலிருந்து மீன்வளத்துறை பிரிந்து இருக்கிறது. இது அந்தந்த துறைகளின் வளர்ச்சியை நமக்கு காட்டுகிறது. தமிழ்நாட்டில் வேளாண் பல்கலைக்கழகம், மாணவர்களுக்கு வேளாண் சார்ந்த துறைகளில் பல்வேறு பட்டப்படிப்புகளை பல கல்லூரிகளில் வழங்கி வருகிறது.

Bsc Agriculture hons

Bsc horticulture hons

Bsc home science

Bsc food Science

B.tech Agriculture engineering

B.tech food technology

Bsc food Science and Nutrition போன்ற நான்கு வருட பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது.

Bachelor of Veterinary science and animal husbandry ( கால்நடை மருத்துவ படிப்பு)

Btech Food Technology

Btech dairy technology

Btech poultry technology போன்ற பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. இதோடு தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம்,

Bachelor of Fisheries Science

B.tech fish engineering

B.tech biotechnology

B.tech Food Technology

B.tech Fisheries and nautical technology

Btech energy and environmental engineering

முனைவர் சண்முகசுந்தரம்

BBA Fisheries business management போன்ற பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. இவை அனைத்திற்கும் 12 ஆம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்கள் மட்டுமே போதுமானது. மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடப் படிப்புகளில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். நீட் போன்ற நுழைவு தேர்வுகள் கிடையாது” என்றனர். இதைத் தொடர்ந்து பேசிய பேராசிரியர் டாக்டர் முருகன், கால்நடை மருத்துவம் மற்றும் அதன் முக்கியத்துவங்களை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.