`சீன அதிபர் ஜி ஜின்பிங் சர்வாதிகாரிதான்.’ – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோவில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்குச் சென்றார். அமெரிக்காவுக்குச் சென்ற ஜி ஜின்பிங், உச்சி மாநாட்டுக்கு முன்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். சுமார் ஓராண்டுக்குப் பிறகு இருவரும் நேரில் சந்தித்திருக்கின்றனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையிலான விரிசல், மோதலாக மாறிவிடக் கூடாது. அமெரிக்க-சீன இரு தரப்பு உறவு உலகிலேயே மிக முக்கியமானது. இருவரும் ஒருவரை ஒருவர் புறக்கணிக்க முடியாது எனப் பேசியதாகக் கூறப்படுகிறது.

பைடன், ஜி ஜின்பிங்

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம், `சீன அதிபர் சர்வாதிகாரி என்ற கருத்தில் இன்னும் உறுதியாக இருக்கிறீகளா?’ எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “சீன அதிபர் ஜி ஜின்பிங் சர்வாதிகாரிதான். ஏனென்றால் அவர்களது நாடு கம்யூனிஸ்ட் நாடு. நாம் அமைத்திருக்கும் அரசைவிட முற்றிலும் மாறுபட்டது அவர்களது அரசு” என்று பதிலளித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.