சென்னையில் இன்று மாலை, திமுக மகளிர் அணி சார்பில் `மகளிர் உரிமை மாநாடு’ நடைபெறவிருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சென்னை விமான நிலையம் வந்திறங்கினர். அதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கே.எஸ் அழகிரி, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் விமான நிலையத்தில் இருவரையும் வரவேற்றனர்.

ஸ்டாலின் – கனிமொழி – உதயநிதி – சோனியா – பிரியங்கா

அப்போது, ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு புத்தகங்களைப் பரிசளித்தனர். அதையடுத்து, பிரியங்கா காந்தியுடன் கிண்டியிலுள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றார் சோனியா காந்தி.

பின்னர் சோனியா காந்தி வருகை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “நம் ஊருக்கு வந்திருக்கிறார். விருந்தளிப்பது என்பது நம் பண்பாடு. அதனால்தான் செய்கிறோம். கருத்துகள் கூற மாலையில் மாநாடு இருக்கிறது. அதில் நிறைய விஷயங்கள் குறித்து பேசவிருக்கிறோம். இந்த நாட்டில் இருக்கும் மக்கள் தொகையில் சரிபாதி அளவு பெண்கள்தான் இருக்கின்றனர். அவர்களை மையப்படுத்தக்கூடிய விஷயங்கள், அவர்களின் அக்கறை, கவலை, பெண்களின் பாதுகாப்பு, அரசியலில் அவர்களுக்கு இருக்க வேண்டிய நியாயமான பங்கு இது குறித்து மாநாட்டில் தலைவர்கள் பேசுவார்கள்” என்றார்.

கனிமொழி – பிரியங்கா காந்தி – சோனியா காந்தி

அதைத்தொடர்ந்து, சோனியா காந்தி தலைமையில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “இந்த ஆலோசனையில் சாதிவாரி கணக்கெடுப்பு, மகளிர் இட ஒதுக்கீடு பற்றி ஆலோசிக்கப்படவிருக்கிறது. மேலும், தேர்தல் குறித்த ஆலோசனை எதுவும் இதில் கிடையாது” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

அதேபோல் காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர், “தொகுதி ஒதுக்கீடு குறித்து எங்களுடன் இப்போது பேச எதுவும் இல்லை. நாடாளுமன்றம், சட்டமன்ற செயல்பாடுகள், கட்சியின் வளர்ச்சி இது குறித்து பேச வாய்ப்பிருக்கிறது” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

அதைத்தொடர்ந்து 12 மணியளவில் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இ.வி.கே.எஸ்.இளங்கோவன், செல்வப்பெருந்தகை, திருநாவுக்கரசர், ஜோதிமணி, விஜய் வசந்த் என 67 பேர் கலந்துகொண்டனர்.

கே.எஸ்.அழகிரி

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, “தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசித்தோம். குறிப்பாக சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு குறித்து பேசினோம். கட்சி வெற்றி பெற வேண்டும், தோழமைக் கட்சிகளுடன் எப்படி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசித்தோம். பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிடவில்லை. அதுகுறித்து தவறான தகவல் வெளிவருகிறது” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.