காலை எழுந்தவுடன் டீ இல்லாமல் பலருக்கு நாளே தொடங்காது. டீ பலருக்கும் உற்சாக பானமாகவே இருக்கிறது. உலகம் முழுவதும் அதிகளவில் பருகப்படும் பானங்களில் டீ முதலிடத்தில் இருக்கிறது.

டீ குடிப்பதில் பல நன்மைகள் இருந்தாலும் பால் சேர்க்கப்பட்ட டீயை (Milk tea) குடிப்பது  மனநல பிரச்னைகளை ஏற்படுத்தும். அதோடு இளம் வயதினரிடையே சமூக தொடர்பு குறையும் என சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

Representational image

இதற்காக சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள 5,281 கல்லூரி மாணவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சீனாவில் உள்ள நிதி மற்றும் பொருளாதார மத்திய பல்கலைக்கழகம் மற்றும் சிங்குவா பல்கலைக்கழகம் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன.

ஆய்வின் முடிவுகள், பால் சேர்க்கப்பட்ட டீயை குடிப்பது அதற்கு அடிமையாக்குவது மட்டுமல்லாமல் மனச்சோர்வு மற்றும் பதற்றத்திற்கு வழிவகுப்பதாகக குறிப்பிட்டுள்ளன.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “பால், தேயிலை சேர்த்துத் தயாரிக்கப்படும் பல வகையான டீ இந்தியா உட்பட ஆசியாவின் பல பகுதிகளில் பிரபலம். குறிப்பாக இளைஞர்களிடையே பிரபலமாக இருக்கிறது. இது உடல்நலம் குறித்த எச்சரிக்கையை எழுப்புகிறது’’ என்று தெரிவித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை முறை டீ குடிக்கிறீர்கள்… டீ குடிக்க முடியாவிடில் உங்களுக்கு எப்படி இருக்கும்?!      

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.