மற்றுமொரு வெண்கலம்!

25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் விஜய்வீர் சிந்து, அனீஷ், ஆதர்ஷ் சிங் அடங்கிய அணி 1718 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது!

வெண்கலம் வென்ற பிரதாப் சிங் தோமர்!

வெண்கலம் வென்ற பிரதாப் சிங் தோமர்!

10 மீட்டர் ஏர் ரைபிள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 229.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்!

நால்வர் படகுப்போட்டியில் இந்தியா வெண்கலம்!

நான்கு பேர் படகுப் போட்டியில் (Rowing – Men’s Four) இந்தியைவைச் சேர்ந்த ஜஸ்வீந்தர் சிங், பீம் சிங், புனித் குமார் மற்றும் ஆஷிஷ் அடங்கிய அணி 6:10:81 வினாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது!

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்க வாய்ப்பு!

ருத்ரன்க்ஷ், திவ்யான்ஷ் சிங் பன்வர் மற்றும் பிரதாப் சிங் தோமர் மூவரும் ஆடவர் ஒற்றையர் 10மீட்டர் ஏர் ரைபிளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்!

ஸ்விம்மிங்: இறுதிப்போட்டியில் ஸ்ரீஹரி நட்ராஜ்

ஸ்விம்மிங்: இறுதிப்போட்டியில் ஸ்ரீஹரி நட்ராஜ்

ஆடவர் 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் ஸ்விம்மிங்: 25.43 வினாடிகளில் நீந்தி, ஹீட் சுற்றுகளின் முடிவில் மொத்தமாக ஆறாவது இடம்பிடித்து இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றர் ஸ்ரீஹரி நட்ராஜ்.

உலக சாதனையுடன் முதல் தங்கம்!

உலக சாதனையுடன் முதல் தங்கம்! – Mens 10m Air Rifle – Team

10 மீட்டர் ஏர் ரைபிளில் இந்திய அணி உலக சாதனையுடன் தங்கம் வென்றது இந்திய அணி. ருத்ரன்க்ஷ், திவ்யான்ஷ் சிங் பன்வர் மற்றும் பிரதாப் சிங் தோமர் அடங்கிய அணி 1893.7 புள்ளிகளுடன் உலக சாதனைப் படைத்தது!

இன்று மொத்தம் எட்டு பதக்கங்களுக்காக பல்வேறு விளையாட்டுகளில் களமிறங்குகிறது இந்தியா. மொத்தம் எத்தனை பதக்கங்களை வெல்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.