புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்புக்கு திரெளபதி முர்மு அழைக்கப்படாதது மட்டும்தான் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்புக்கு காரணமா?”

“அதுமட்டும் காரணம் இல்லை. இப்போது இருக்கிற நாடாளுமன்றத்தில் என்ன குறை இருக்கிறது? பரந்த இடம் இருக்கிறது. அற்புதமான கட்டடம். ஆனால் தன்னுடைய பெயர் வர வேண்டுமென்பதற்காக புதிய கட்டடத்தை மோடி கட்டியிருக்கிறார். அதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.”

புதிய நாடாளுமன்றம் – செங்கோல் – பிரதமர் மோடி

“சாவர்க்கர் ஒரு சிறந்த தொலநோக்குவாதி, சுதந்திரத்திற்காக சொல்லொணா துயரத்தை அனுபவித்தார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்கிறாரே?”

“அவர்கள் பார்வையில் சாவர்க்கர் தொலைநோக்குவாதி, கோட்சே தியாகி. இதெல்லாம் நியாயமா? உண்மையை எவராலும் திரிக்க முடியாது. ஹிட்லர் கடைசியில் தற்கொலை செய்துகொண்டுதான் மரணித்தார் என்பதை மறந்துவிடக் கூடாது. காலச் சக்கரத்தை பின்னோக்கி சுழற்றினால் தோல்விதான் மிஞ்சும்.”

“அப்படியானால் ஹிட்லரோடு மோடி ஆட்சியை ஒப்பிடுகிறீகளா?”

“நிச்சயமாக. ஹிட்லருக்கும் மோடிக்கும் வித்தியாசம் இல்லை.”

அண்ணாமலை

“DMK files இரண்டாம் பாகத்தை அண்ணாமலை வெளியிடப்போவதாக கூறியிருக்கிறாரே?”

“அண்ணாமலை இதுவரை கூறிய குற்றச்சாட்டு எதையாவது நிரூபித்திருக்கிறாரா?”

“பால்வளத்துறை மீது அண்ணாமலை வைத்த புகாரை அடுத்து நாசரை அமைச்சரவையில் இருந்து நீக்கியிருக்கிறார்களே?”

“அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டால்தான் நாசரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார்கள் என்று பா.ஜ.க சொல்லிக்கொள்ளலாம். நானும் ரெளடிதான் என்று வடிவேலு சொல்வதைப் போல இது நகைச்சுவையாக இருக்கிறது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கூறினால் மீண்டும் பதவியை கொடுத்தாலும் கொடுத்துவிடுவார்.”

கே.எஸ்.அழகிரி

“காங்கிரஸ் மதுவிலக்கு கொள்கையில் இன்னும் உறுதியோடு இருக்கிறதா? கள்ளச்சாராய மரணங்களைக் கண்டித்து போராட்டம் நடத்தவில்லையே?”

“மதுவிலக்கு கொள்கையில் இப்போதும் உறுதியாக இருக்கிறோம். கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறோம். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, மரணங்களை நியாயப்படுத்துகிறது என்றால் நாங்கள் போராட்டம் நடத்தலாம். ஆனால் அரசுதான் நடவடிக்கை எடுத்திருக்கிறதே?”

“ஆனால் தேர்தல் வாக்குறுதி கொடுத்தபடி மது விலக்கு கொள்கைகளை இன்னும் திமுக அமல்படுத்தவில்லையே?”

“காங்கிரஸ் தலைவர் என்பதால் சொல்லவில்லை. அரசியல் பார்வையாளராகச் சொல்கிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவாக சிந்திக்கிறார். தவறுகளை கண்டிக்கிறார். திருத்திக் கொள்கிறார். சரி செய்கிறார். ஆட்சியாளருக்கு வேண்டிய பண்புகள் இவை. சில விஷயங்களை ஜூம் மந்திரகாளி என உடனே செய்துவிட முடியாது. மதுக்கடைகளை மூடுவதும் அப்படித்தான். படிப்படியாகச் செய்வார்கள் என நம்புகிறேன். செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் வைக்கிறேன். மதுரையில் நாங்கள் நடத்தப்போகிற கூட்டத்தில் இதை மையப்படுத்தி பேசுவோம்.”

ஸ்டாலின் – அழகிரி

“தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு எப்படி இருக்கிறது?”

“நன்றாக இருக்கிறது.10 கோடி மக்கள் வாழும் இடத்தில் ஒன்றிரண்டு தவறுகள் நடக்கத்தான் செய்யும். ராம ராஜ்ஜியத்திலேயே தவறு நடந்திருக்கிறது.”

“வேங்கைவயல், கள்ளச்சாராய மரணங்கள் சட்டம், ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறதே?”

“அரசு இவற்றை எங்கும் நியாயப்படுத்தவில்லை. நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் இப்படிப்பட்ட தவறுகளை அரசே நியாயப்படுத்துகிறது. தவறுகளை அரசே நியாயப்படுத்தினால் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது எனலாம். தமிழ்நாட்டில் அப்படியில்லை.”

ஸ்டான்லி அரசு மருத்துவமனை

“3 மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“வன்மையாகக் கண்டிக்கிறேன். கட்டமைப்புகளில் குறைகள் இருந்தால் கூட அதைச்சொல்லி அதை நிவர்த்தி செய்ய ஒரு அவகாசத்தை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என அங்கீகாரத்தை ரத்து செய்வது நல்ல ஆட்சிமுறை அல்ல. சிசிடிவி சரியாக இயங்கவில்லை என்பதெல்லாம் ஒரு காரணமா? இது அகந்தையான செயல். ஆடு மோதி வந்தே பாரத் ரயில் சேதமானதே? உடனே வந்தே பாரத் ரயிலை நிறுத்திவிடுவார்களா? 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகார ரத்தை உடனே திரும்பப் பெற வேண்டும்.”

“கர்நாடகாவில் 4,5 மாதங்களில் அரசியல் சூழல் மாறிவிடும் என பசவராஜ் பொம்மை கூறுகிறாரே?”

“ஏன் அவர் காங்கிரஸ் வரப்போகிறார் என்கிறாரா?”

“ஒருவருக்கு ஒரு பதவி என்ற ராய்பூர் மாநாட்டின் முடிவை மீறி டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறதே?”

“சில நேரங்களில் சில விதிவிலக்குகள் இருக்கும். விஞ்ஞானமே அது ஏற்றுக்கொள்கிறது. ஒருவரின் தியாகம், அர்ப்பணிப்பு போன்ற காரணிகளை வைத்து இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகிறது. அதில் தவறில்லை.”

டி.கே.சிவகுமார்

“பஜ்ரங் தள் அமைப்பை கலைத்தால் காங்கிரஸை சாம்பாலாக்கிவிடுவோம் என பா.ஜ.க-வினர் கூறுகிறார்களே?”

“ஏன் எரித்து விடப்போகிறார்களா? வன்முறைவாதிகளால்தான் இப்படிப் பேச முடியும். அப்படிப்பட்ட அமைப்புகளை தடை செய்வதில் தவறில்லை.”

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.