ஜப்பானைச் சேர்ந்த ஆறு நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆறு நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

“நாட்டில் சர்வாதிகார ஆட்சி தொடங்கிவிட்டதா?” – மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்

மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், “பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட பிரிஜ் பூஷண் சிங் மீது ஏழு நாள்களுக்குப் பிறகே டெல்லி போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தது. ஆனால், அமைதியாகப் போராடிய மல்யுத்த வீரர்கள்மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய ஏழு மணி நேரம்கூட ஆகவில்லை. இந்த நாட்டில் சர்வாதிகார ஆட்சி தொடங்கிவிட்டதா… விளையாட்டு வீரர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

கள்ளச்சாராயம், கஞ்சா, போலி மதுபானம், போதைப்பொருள் விற்பனையைக் கண்டித்தும், தி.மு.க அரசுக்குக் கண்டனம் தெரிவித்தும் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!

அ.தி.மு.க அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தி.மு.க அரசைக் கண்டித்து நாகர்கோவிலில் அ.தி.மு.க சார்பில் நடைபெற்றுவரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!

NVS-01 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது GSLV-F12 ராக்கெட்!

GSLV-F12 ராக்கெட்

என்.வி.எஸ்-01 செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எஃப் 12 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. 2.232 கிலோ எடைகொண்ட ஜி.எஸ்.எல்.வி செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக்கடிகாரம் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

4-வது நாளாகத் தொடரும் ரெய்டு..!

செந்தில் பாலாஜி உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் தொடர்புடைய இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் வருமான வரித்துறையின் ரெய்டு நடைபெற்றுவருகிறது. சென்னை, கோவை, கரூர் என நடைபெற்றுவரும் சோதனையில் ஒருசில இடங்களில் ரெய்டு முடிவுக்கு வந்தாலும், கோவை உள்ளிட்ட சில இடங்களில் 4-வது நாளாக ரெய்டு தொடர்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.