ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் தாங்கள் பங்குச் சந்தையில் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்களை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

UPSC

இதுத் தொடர்பாக பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நிறுவனப் பங்குகள் அல்லது பங்குச் சந்தை சார்ந்த இதர முதலீடுகளில் ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிவர்த்தனைகளின் மதிப்பு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் ஆறு மாத அடிப்படை ஊதியதுக்கு அதிகமாக இருந்தால் அது குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இந்த விதிகள் மூன்று அகில இந்திய சேவை பணிகளுக்கும் பொருந்தும். அகில இந்திய பணிகள் நடத்தை விதிகள் 1968 16(4)-ன் கீழ் பகிரப்பட வேண்டிய ஒத்த தகவலுடன் இந்த அறிவிப்பு உள்ளது. அகில இந்திய பணி (ஏஐஎஸ்) நடத்தை விதிகளின்படி, நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள் ஆகியவை அசையும் சொத்துகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Stock market

எந்த சேவை அதிகாரியும் நிறுவனப் பங்குகள் அல்லது பிற பங்குச் சந்தை முதலீடுகளில் ஊக வணிகம் செய்யக்கூடாது. பங்கு தரகர்கள் அல்லது முறையாக அங்கீகரிக்கப்பட்ட பிற நபர்கள் மூலம் அவ்வப்போது செய்யப்படும் முதலீட்டுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.