பான் கார்டு – ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு!

பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக இந்த காலக்கெடுவை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM