சில நேரங்களில் நம் பக்கம் யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்க நீங்கள் சில விஷயங்களை செய்யவேண்டும் என்று கூறிய ரொனால்டோ, மான்செஸ்டர் கிளப்பிலிருந்து விலகியதற்கு பிறகு தான் ஒரு சிறந்த மனிதராக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பிலிருந்து விலகிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவின் அல் நாஸ்ர் கிளப்பில் இணைந்து விளையாடி வருகிறார்.

போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட்டை கிளப் அணிக்காக விளையாடிய போதுதான் ஒரு ஜாம்பவான் வீரராக உருவெடுத்து தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். இதுவரை மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 346 போட்டிகளில் விளையாடி இருக்கும் ரொனால்டோ 145 கோல்களை அடித்துள்ளார்.

image

மான்செஸ்டர் யுனைடெட் உடனான முதல் பேஸ்ஸில் தலைசிறந்த வீரராக இருந்த ரொனால்டோ, கடந்த 2021ஆம் ஆண்டு 2 வருடத்திற்கு மீண்டும் மான்செஸ்டரால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். புதிய தலைமை பயிற்சியாளராய் எரிக் டென் ஹாக் தலைமை ஏற்றுக்கொண்ட நிலையில், மான்செஸ்டர் தொடர்ந்து ஏற்றத்தை காணும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அதெற்கெல்லாம் மாறாக 2021-2022ஆம் ஆண்டு பிரீமியர் லீக் தொடரில் ரொனால்டோ பங்கேற்காமல் தவிர்த்திருந்தார்.

image

கடந்த 2021-2022 சீசனில் ரொனால்டோ பங்கேற்று ஆடாமல் இருந்ததற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அணியின் பயிற்சியாளர் எரிக் டென் ஹாக் தான் காரணம் என அவருடைய ரசிகர்கள் கூறி வந்தனர். மேலும் அந்த சீசனில் யுனைடெட் அணியானது தொடரில் நாக் அவுட்டிலிருந்து வெளியேறி 6ஆவது இடத்தை தான் பிடித்தது. இந்நிலையில் அதற்கு பிறகு ஒரு நேர்காணலில் மான்செஸ்டர் யுனைடட் குறித்தும், பயிற்சியாளர் எரிக் டென் ஹாக் குறித்தும் தாக்கி பேசியிருந்தார் ரொனால்டோ. தனது மகன் உடல்நிலை சரியில்லாத போதும் கூட தன்னை அவர் குடும்பத்தோடு இருக்க விடவில்லை என்றும், தனக்கு அவர்மேல் எந்தவிதமான மரியாதையும் இல்லை என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

image

ரொனால்டோவின் அந்த சர்ச்சைக்குரிய நேர்காணலுக்கு பிறகு ரொனால்டோ உடனான ஒப்பந்தத்தை இரு தரப்பும் சுமூகமாக முறித்துக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது மான்செஸ்டர். அதற்கு பிறகு சவுதி அரேபியாவின் அல் நாஸ்ர் கிளப்பில் இணைந்து விளையாடிவருகிறார் கிறிஸ்டியானோ. இந்நிலையில் விலகியதற்கு பிறகு பிரிவை குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்துவந்த ரொனால்டோ தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.

image

மான்செஸ்டர் உடன் ஏற்பட்ட முறிவுக்கு பிறகு தான் ஒரு சிறந்த மனிதனாக மாறியிருப்பதாக கூறியிருக்கும் ரொனால்டோ, “சில நேரங்களில் நம் பக்கம் யார் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க நீங்கள் சில விஷயங்களைச் செய்ய வேண்டும். மான்செஸ்டர் யுனைடட் உடனான தொழில்முறை வாழ்க்கையில் நான் சில மோசமான நேரத்தை கடந்து வந்திருக்கிறேன். அதை சொல்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதற்கெல்லாம் வருத்தப்படுவதற்கு எனக்கு நேரமில்லை. வாழ்க்கை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பழைய வாழ்க்கை நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது என் வளர்ச்சியின் ஒரு பகுதி. அது கடந்துவிட்டது அவ்வளவு தான்” என்று கூறினார்.

மேலும், “நாம் மலையின் உச்சியில் இருக்கும்போது, கீழே என்ன இருக்கிறது என்பதை நம்மால் அடிக்கடி பார்க்க முடியாது. என் வாழ்க்கையில் இப்போது நான் அனைத்திற்கும் மிகவும் தயாராக இருக்கிறேன், கற்றுக்கொள்வது என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் கடந்த சில மாதங்களாக நான் எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை. கீழே இருக்கும் அந்த பிரச்சனையையும் நான் பார்க்கவில்லை. மான்செஸ்டர் யுனைடட்-லிருந்து வெளியேறிய பிறகு இப்போது நான்” ஒரு சிறந்த மனிதனாக” மாறியிருக்கிறேன் என்று ரொனால்டோ மேலும் கூறினார்.

image

ரொனால்டோ தனது யுனைடெட் விலகல் குறித்து பேசுவது இதுவே முதல் முறையாகும். இதுபற்றி மனம் திறந்து பேசிய அவரிடம் மீண்டும் யுனைட்டில் இணையும் வாய்ப்பு இருக்குமா என்று கேட்கப்பட்டபோது, ”மான்செஸ்டர் யுனைடட் உடனான சேப்டர் அவ்வளவு தான் மூடப்பட்டுவிட்டது” என்று தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.