தொழிற்பயிற்சி வழங்க ரூ.50 கோடி ஒதுக்கீடு..

தமிழகத்தைச் சேர்ந்த படைவீரர்கள் குடும்பத்துக்கு வழங்கப்படும் கருணைத்தொகை ரூ.40 லட்சமாக உயர்வு.

மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்குவதற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு

மதுரையில் கலைஞர் நூலகம் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும்.

வரும் 2023-2024-ம் நிதி ஆண்டில் 10 லட்சம் மாணவர்களுக்கு தொழில்பயிற்சி வழங்க வேண்டும் என தி.மு.க அரசு உறுதி பூண்டுள்ளது. – நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா…

வரும் ஆண்டில் 10 கோடி மதிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா நடத்தப்படும். சர்வதேச புத்தக கண்காட்சி வரும் நிதி ஆண்டிலும் நடத்தப்படும்

குடிமைப்பணியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை…

குடிமைப்பணி தேர்வுகளில் தேர்ச்சி பெரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனால் குடிமைப்பணியில் தேர்ச்சி பெற்ற 1,000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக ரூ.7,500 உதவித்தொகையும், முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் 1,000 மானவர்களுக்கு ரூ.25,000 உதவித்தொகையும் வழங்கப்படும். – அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

உயர்கல்வி துறைக்கு ரூ.6967 கோடி ஒதுக்கீடு…

உயர்கல்வி துறைக்கு ரூ.6967 கோடி ஒதுக்கீடு.

சமூக நீதியையும் சமுத்துவக் கொள்கையையும் கொண்டுள்ள இந்த அரசு ஆதிதிராவிட பழங்குடியின மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளைத் திட்டமிட்டுவருகிறது. 100 கோடி ரூபாயில் ஆதிதிராவிட பழங்குடியின விடுதிகள் கட்டப்படும்.

குடிமைப்பணி தேர்வுகளில் தேர்ச்சி பெரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனால் குடிமைப்பணியில் தேர்ச்சி பெற்ற 1,000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக ரூ.7,500 உதவித்தொகையும், முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் 1,000 மானவர்களுக்கு ரூ.25,000 உதவித்தொகையும் வழங்கப்படும்.

தொழிற்பயிற்சி மையங்கள் புதுப்பிக்கப்படும்…

அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

கிருஷ்ணகிரியில் உள்ள சூளகிரி சிப்காட் மேம்படுத்தப்படும்

ரூ.110 கோடியில் 4,5ம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.

ரூ.120 கோடி செலவில் சென்னை அம்பத்தூரில் உலகளாவிய பயிற்சி மையம்.

இளைஞர்களுக்கு தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படும். சென்னை அம்பத்தூரில் இளைஞர்களுக்கான நவீன வசதிகளுடன் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் வருகிற ஜூன் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் உறுதி.

தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி மையங்கள் ரூ.2,877 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.

சீர்மரபினர் இந்து சமய அறநிலைத்துறை பள்ளிகளும் பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும்

சென்னை கிண்டியில் கலைஞர் கருணாநிதி பெயரில் பல்நோக்கு மருத்துவமனை. இந்த ஆண்டே திறக்கப்படும் – அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

1000 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

குடிமைப்பணி முதன்மை தேர்வுக்குத் தயாராகும் 1000 மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்…

4, 5 வகுப்பு மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

இனி அனைத்து துறைகள் நடத்தும் அனைத்து பள்ளிகளுமே பள்ளிக்கல்வி துறையின் கீழ் கொண்டுவரப்படும் 

மருத்துவம் திட்டம் விரிவுப்படுத்தப்படும்…

அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யபப்ட்டுள்ளது.

கிண்டியில் கருணாநிதி பெயரில் பன்னோக்கு மருத்துவமனை நடப்பாண்டிலேயே கட்டப்படும்.

211 தொழிற்சாலைகளில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.18661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் விரிவுபடுத்தப்படும்.

தமிழ் வளர்ச்சி துறைக்கான அறிவிப்பு…

தமிழகத்தில் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்.

தாளமுத்து நடராஜனுக்கு சென்னையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்

தமிழ் மொழி உலகம் மொழியாக திகழ பண்பாட்டு மாநாடு நடத்தப்படும்

தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழியை வளர்க்க பண்பாட்டு தமிழ் மாநாடு நடத்தப்படும்.

வயது முதிர்ந்த 590 அறிஞர்களுக்கு இலவச பேருந்து பயண பாஸ் வழங்கப்படும்.

சென்னை சங்கமம் கலை விழா மேலும் 8 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்

நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்

590 அறிஞர்களுக்கு இலவச பேருந்து பயண பாஸ்…

தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும். மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராஜனுக்கு நினைவிடம் அமைக்கப்படும்.

வயது முதிர்ந்த 590 அறிஞர்களுக்கு இலவச பேருந்து பயண பாஸ் வழங்கப்படும்.

இலங்கை தமிழர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்துக்கு ரூ.223 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. -அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிப்பெயர்க்கப்படும்…

அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிப்பெயர்க்கப்படும். நாட்டுப்புற கலைகளை மேம்படுத்தவும் அவற்றை காப்பாற்றவும் நாட்டுப்புற கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். சென்னை சங்கமம் கலைநிகழ்ச்சி மேலும் 8 நகரங்களில் நடத்தப்படும். -நிதியமைச்சர்

சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

துறைவாரியான வரவு செலவு திட்ட அறிக்கை யை வாசித்துவருகிறார் நிதியமைச்சர்..

தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 நிதியமைச்சர் உரை…

பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய முன்னோடிகளின் வழிகாட்டுதலில் அரசு செயல்பட்டுவருகிறது. ஒவ்வொரு நிதி சார்ந்த நடவடிக்கைகளிலும் நீதியை நிலைநாட்டுவதை அரசு உறுதி செய்துவருகிறது.

மத்திய அரசைவிட தமிழ்நாடு அரசு நிதிப் பற்றாக்குறையை வெகுவாகக் குறைத்திருக்கிறது. வருவாய் பற்றாக்குறையை ரூ.30 ஆயிரம் கோடியாகக் குறைத்திருக்கிறோம். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை சமூகப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தந்து திட்டமிட்டு வருவதோடு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருப்பதை உறுதி செய்துவருகிறது.

அதிகரித்துவரும் பணவீக்கம், தொடரும் ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவைப் பொருளாதார வளர்ச்சிக்குச் சவாலாகவே இருந்துவருகிறது

மாதம் 1000 ரூபாய்…

20223 – 24ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட்டில் திமுக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான மாதம் 1000 ரூபாய் குறித்தான அறிவிப்பானது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிபொருள் விலையினை கட்டுக்குள் கொண்டு வர, பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எனவே இதற்கான அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட்டினை சட்டசபையில் தாக்கல் செய்யவுள்ளார். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் வந்துள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.