திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் தமிழகத்தில் முதல்முறையாக 63 வயது மதிக்கத்தக்க நபருக்கு இருதய குழாயில் ஏற்பட்ட சுண்ணாம்பு படிவ அடைப்புகளை நீக்கி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இந்த அறுவை சிகிச்சை தொடர்பாக அரசு மருத்துவமனையின் முதல்வர் நேரு, அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் முனுசாமி மருத்துவர் கண்காணிப்பாளர் அருண் ராஜா, உள்ளிட்ட மருத்துவர்கள் குழு இன்று நிருபர்களை சந்தித்து பேசினர்.

இரத்த குழாயில் அதிகமான கால்சியம் படிமங்கள்!

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 63 வயது மதிக்கத்தக்க முதியவர் மாரடைப்பு காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் சுண்ணாம்பு படிவம் படிந்திருந்தது கண்டறியப்பட்டது. 

image

இருதய குழாயில் ஏற்படக்கூடிய அடைப்புகளை சரி செய்வதற்கு ஆஞ்சியோ செய்யப்படுவது வழக்கம். ஆனால், இவருக்கு சுழற்சி ஆஞ்சியோ செய்யப்பட்டு ஸ்டண்ட் வைக்கப்பட்டுள்ளது. இரத்த குழாயில் அதிகமான கால்சியம் படிமங்கள் இருந்தது அகற்றப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை தமிழகத்தில் முதல்முறையாக திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனை செய்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் ரூ.8 லட்சம் வரை ஆகும்!

இந்த சிகிச்சைக்கு வெளியே தனியார் மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 6 லட்சம் முதல் அதிகபட்சம் 8 லட்சம் வரை செலவாகும். ஆனால், தமிழக அரசின் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களின் மதிப்பு சுமார் 1.5 கோடியாகும்.

யாருக்கெல்லாம் இந்த பிரச்னை வரும்?

கொழுப்பு, இரத்த சிவப்பணுக்கள் உள்ளிட்டவற்றால் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவது வழக்கம். ஆனால் வெகு சிலருக்கே ரத்த குழாய்களில் இது போன்ற கால்சியம் படிமங்கள் அடைத்துக் கொள்ளும். பெரும்பாலும் ரத்த கொதிப்பு உள்ளவர்கள், புகைப்பிடிப்பவர்கள், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு இது போன்ற அடைப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

திருச்சி, தஞ்சையில் அதிக பாதிப்பு

தமிழகத்தில் திருச்சி, தஞ்சை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு இருதய குழாய்களில் அதிகமாக கால்சியம் படிமங்கள் உள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களில் 30 சதவீதம் பேருக்கு ரத்த குழாய்களில் கால்சியம் படிமங்கள் இருப்பது ஆய்வில் தெரிய வருகிறது.

ரோட்டோ ஆப் லெட்டர் சிகிச்சை முறை

தற்போது இந்த நோயாளிக்கு செய்யப்பட்டுள்ள சிகிச்சையானது ரோட்டோ ஆப் லெட்டர் என்ற சிகிச்சை முறையை கையாண்டனர். அரை மணி நேர சிகிச்சைக்கு பிறகு பாதிக்கப்பட்ட நபர் மூன்று நாளைக்கு கண்காணிப்பில் வைக்கப்பட்டு பின்னர் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். தற்போது அவர் உடல் நலம் மிக சிறப்பாக உள்ளது என தெரிவித்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.