இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்தால், அவர்களுக்கு எதிராக கடலிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுங்கள் என இலங்கை மீனவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அறிவுரை வழங்கியுள்ளார்.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களின் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி தொழிலில் பல்வேறு சிரமங்களை தமிழ்நாட்டு மீனவர்கள் அனுபவித்து வருகின்றனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர் கதையாகவே நடைபெற்று வருகிறது. கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் இலங்கையில் உள்ள சிறைகளில் அடைக்கப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படும் தொடர்ந்து நடைபெறுகிறது. மீன்பிடிப்பதையை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ள தமிழக மீனவர்கள் இத்தகைய தொடர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்திய மீனவர்களுக்கு எதிராக கடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று பேசிய அவர், இந்த தகவலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

image

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், எல்லைத்தாணடும் இந்திய மீனவர்களை இலங்கை படையினர் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கும் பொழுது, அது வேறுவிதமாக பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில், எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கண்டித்து எமது மீனவர்களை கடலில் ஆர்ப்பாட்டம் செய்யுமாறு அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

image

மேலும் எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்கும் போது, அதனை இலங்கை வடபகுதி மீனவர்களுக்கு வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.