“பிரதமர் மோடி, அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கு தகுதியானவர்; அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளராக இவர் இருக்கிறார்” என்று நோபல் பரிசுக்குழுவின் துணைதலைவர் ஆஷ்லே டோஜே கருத்து தெரிவித்திருப்பதாக ஒரு செய்தியை தமிழ்நாடு பாஜக நேற்று ஒரு பதிவிட்டிருந்தது.


உண்மையில் ஆஷ்லே டோஜே அப்படியொரு கருத்தையே தெரிவிக்கவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஆஷ்லே டோஜேயேவும், ‘அது முற்றிலும் போலியான தகவல்’ என்று கூறியுள்ளார்.

டோஜே இதுபற்றி பேசுகையில், “ஒரு போலியான செய்தி ட்வீட்டாக போடப்பட்டுள்ளது. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து நாமே உயிர் கொடுக்க வேண்டாம். நான் அதுபோன்ற கருத்துகளை தெரிவிக்கவில்லை என்பதை மட்டும் உறுதிபட தெரிவிக்கிறேன்” என்றுள்ளார்.

image

அவரது இந்திய வருகை எதற்காக என்பது பற்றி பேசுகையில், “நான் நோபல் பரிசுக்குழுவின் துணைத்தலைவராக இங்கு வரவில்லை. அமைதிக்கான சர்வதேச தூதுவராக மட்டுமே இங்கே வந்துள்ளேன். இந்தியாவின் நண்பனாக வந்துள்ளேன்” என்றுள்ளார். ‘மோடி அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க தகுதியான நபர்’ என அவர் குறிப்பிடவில்லை எனில், அவர் என்னதான் குறிப்பிட்டார்? எந்த கருத்து திரிக்கப்பட்டுள்ளது என்று பார்க்கையில், பின்வரும் கருத்தாக அது தெரிகிறது.

அது, “ரஷ்யா-உக்ரைன் மோதலின் போது ‘இது போரின் சகாப்தம் அல்ல’ என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு இந்திய பிரதமர் மோடி நினைவூட்டியிருந்தார். இது நம்பிக்கையின் வெளிப்பாடு. இன்று உலகப் பிரச்சனைகளை நாம் இப்படி (போர் வழியாக) தீர்த்துக் கொள்ளக் கூடாது என்று இந்தியா சமிக்ஞைகளை அளித்துள்ளது. உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்களின் மதிப்பு பிரதமர் மோடிக்கு பின்னால் உள்ளது.


உக்ரைனில் நடக்கும் போர் ஒரு சோகம். அது முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அனைத்து நாடுகளும் இந்த போருக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அப்படியிருக்கையில் இந்தியா இதில் அணு ஆயுதங்களின் உண்மையான பயன்பாடு பற்றிய ரஷ்யாவுக்கு எடுத்துரைத்தது, அமைதிக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இந்தியா இதை மிகவும் உரத்த குரலில் பேசவில்லை, யாரையும் அச்சுறுத்தவில்லை. அதேநேரம், அது தனது கருத்தை நட்பான முறையில் தெரிவித்தது. உலகின் முதன்மையான சக்திகளில் இந்தியாவும் ஒன்று. சர்வதேச அரசியலில் நமக்கு இது அதிகம் தேவை” என்று கூறியிருந்தார் ஆஷ்லே டோஜே. இதுவே தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.