அதானி குழுமத்தின் பங்கு மதிப்புகள் தொடர் சரிவின் காரணமாக, ஆஸ்திரேலியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதானி குழுமத்தின் பங்கு மதிப்புகள் தொடர் சரிவின் காரணமாக, ஆஸ்திரேலியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதானியின் வீழ்ச்சி, அந்நாட்டின் ஓய்வூதிய சேமிப்பு நிதிகளைப் பாதித்துள்ளதாகத் தெரிய வந்திருக்கிறது. கார்டியன் வெளியிட்டிருக்கும் ஓர் அறிக்கையின்படி, “ஆஸ்திரேலியாவின் 243 டாலர் பில்லியன் ப்யூச்சர் பண்ட், காமன்வெல்த்தின் நீண்டகால நிதி நிலுவையை வலுப்படுத்த அமைக்கப்பட்டது. இதில் குயின்ஸ்லாந்தில் உள்ள அரசு ஊழியர்கள் முதல் தொடங்கி காமன்வெல்த் வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் வரையில் அடங்கும் என தெரிகிறது.

image

இதேபோல பிரிஸ்பேனைத் தலைமையிடமாகக் கொண்ட ஆஸ்திரேலியா ஓய்வூதிய அமைப்பு 200 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துகளுடன் உள்ளது. இந்த பண்டுகள் அதானி குழுமத்தின் மீதான அறிக்கையானது வெளியாவதற்கு முன்பு, ஆறு அதானி நிறுவனங்களில் மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளது. அதேநேரத்தில், ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானி குழும பங்குகள் தொடர் சரிவைச் சந்தித்து வருகின்றன.

ஆஸ்திரேலியாவைப் போலவே நார்வேயின் மிகப்பெரிய பென்சன் பண்ட் நிறுவனமான கேஎல்பியும் முதலீடு செய்திருந்தது. இது அதானி குழும பங்குகளின் சரிவின் காரணமாக பெரும் பகுதி ஹோல்டிங்கினை விற்பனை செய்தது. இது மட்டும் அல்ல, இன்னும் ஏராளமான வெளி நாட்டு நிறுவனங்கள் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள நிலையில், அவற்றின் நிலை என்ன” என கார்டியன் அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளது.

image

மேலும், “கடந்த ஜனவரி 24 முதல், அதானி குழுமத்தின் பங்குகள் மொத்தமாக 134 டாலர் பில்லியன் சந்தை மதிப்பை இழந்துள்ளன. குழுமத்தின் சந்தை மூலதனம் (m-cap) 100 டாலர் பில்லியனுக்கும் கீழே சரிந்துள்ளது. குறிப்பாக, கடந்த 1 மாதத்திற்குள் அதானி பங்குகள் 60 சதவிகித மதிப்பை இழந்துள்ளன. இதனால், ஆஸ்திரேலிய நிறுவனங்களின் ஓய்வூதியத் தொகை கேள்விக்குறியாகி உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சந்தை மதிப்பு விமர்சகரான வில்வான் டிபோல், “அதானி குழும நிறுவனங்களில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு சமீபகாலமாக சரிவைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, அதானி குழும நிதி, நிலக்கரி விரிவாக்கத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா முதலீடு செய்த அந்த ஓய்வூதியத் தொகைதான், விரிவாக்க திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு போடப்பட்ட முதலீடு, பல ஆண்டுகளாகவே ஆபத்தில் இருந்தபோதும், அதை அதானி குழுமம் காணத் தவறிவிட்டது. இதை, ஹிண்டன்பர்க் அறிக்கை கோடிட்டுக் காட்டிருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

– ஜெ.பிரகாஷ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.