நடிகர் அஜித்தின் ‘ஏகே 62’ படப் பூஜை நேற்று சைலண்ட்டாக நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘துணிவு’. இந்தப் படம் அஜித்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல கம்பேக் படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், பல்வேறு காரணங்களால் அந்தப் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தின் பயோவிலிருந்து அஜித் புகைப்படம் மற்றும் ‘ஏகே62’ என குறிப்பிட்டதை நீக்கிவிட்டார்.

image

இதனால் விக்னேஷ் சிவன் ‘ஏகே 62’ படத்திலிருந்து வெளியேறியதை சூசகமாக கூறியுள்ளதாக செய்திகள் பரவி வந்த நிலையில், அடுத்ததாக அஜித் படத்தை இயக்கப்போவதாக வெளியான லிஸ்ட்டில் விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு, மகிழ் திருமேனி ஆகிய இயக்குநர்களின் பெயர்கள் சமூகவலைத்தளங்களில் அடிப்பட்டன. இதில் இயக்குநர் மகிழ் திருமேனி சொன்ன கதை பிடித்துவிட்டதாகவும், அஜித் அவரையே தேர்வு செய்துவிட்டதாகவும் செய்திகள் உலா வந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட்டாக, எளிமையாகவும், சைலண்ட் ஆகவும் அஜித்தின் ‘ஏகே 62’ படத்தின் பூஜை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

image

‘ஏகே 62’ படத்தில் அனிருத் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. லைகா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படும் இந்தப் படத்தில் அஜித்திற்கு வில்லனாக அருண் விஜய் அல்லது அருள்நிதி ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் அருண் விஜய் ஏற்கனவே கௌதம் வாசுதேவ் மேனனின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்திற்கு நண்பனாகவும், வில்லனாகவும் அருண் விஜய் மிரட்டியிருந்தார். ‘ஏகே 62’ படத்தில் ஒருவேளை இணைந்தால், அஜித் – அருண் விஜய் இணையும் இரண்டாவது படமாக அது அமையும்.

image

மேலும், அருண் விஜய், மகிழ் திருமேனியின் ‘தடையறத் தாக்க’ படத்திலும், ‘தடம்’ படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளதால், கூடுதல் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கிரிப்டில் கூடுதல் ஆக்ஷன் காட்சிகள் சேர்க்க அஜித் வலியுறுத்தியுள்ளதாகவும், அதனால் மீண்டும் கதை எழுதுவதில் தாதமம் ஆகி வருவதால், மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் அல்லது இறுதியில் டைட்டிலுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், அப்போது படப்பிடிப்பு துவங்கி அடுத்த ஆண்டு 2024 பொங்கலை முன்னிட்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ் திருமேனியை ட்ரெண்டாக்கி வருகின்றனர். அத்துடன் ‘Done Channel’ என்ற பிரபலங்களுக்கான மக்கள் தொடர்பு  நிறுவனம், இயக்குநர் மகிழ் திருமேனிக்கு எந்த சமூகவலைத்தளம் கணக்கும் இல்லையென்றும், அதனால் ரசிகர்களின் போலியான கணக்குகளை துவங்கி அவரது பெயரில் எந்த போஸ்ட்டுகளும் பதிவுசெய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளது. இதனையும் அஜித் ரசிகர்கள் ‘Code word accepted’ என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். 


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.