மகாராஷ்டிராவில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஜூன் மாதம் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. இப்பிளவு காரணமாக உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை இழந்து கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களையும் பறிகொடுத்துள்ளார். தற்போது எந்த அணி உண்மையான சிவசேனா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் கமிஷன் இது தொடர்பாக விசாரணை நடத்தி முடித்துள்ளது. எந்நேரமும் அதன் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு குறித்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அஜித் பவார் அளித்த பேட்டியில், “சிவசேனாவில் அதிருப்தி நிலவி வருவது குறித்து 2-3 முறை உத்தவ் தாக்கரேயிடம் எச்சரித்தோம். உத்தவ் தாக்கரேயை நேரில் சந்தித்தும் இது தொடர்பாக பேசினோம்.

ஏக்நாத்

சரத் பவாரும் இது தொடர்பாக உத்தவ் தாக்கரேயிடம் தெரிவித்தார். ஆனால் உத்தவ் தாக்கரே தனது எம்.எல்.ஏ.க்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தார். கட்சியில் இருந்து பிரிந்து செல்லும் அளவுக்கு துணிய மாட்டார்கள் என்று சொன்னார். முதலில் 15-16 எம்.எல்.ஏ.க்கள் சென்றவுடன் மற்றவர்கள் செல்லவிடாமல் கட்டுப்படுத்தி தடுத்திருக்கவேண்டும். ஆனால் அது போன்ற முயற்சிகள் எதிலும் எடுக்கப்படவில்லை. கட்சியிலிருந்து விலக விரும்பும் யாரும் விலகலாம் என்ற ஒரு சூழ்நிலை இருந்தது.

உத்தவ் தாக்கரே தனது எம்.எல்.ஏ.க்கள் மீது கண்மூடித்தனமாக நம்பிக்கை வைத்திருந்தார். சிவசேனா தலைவர்கள் தங்களது சக உறுப்பினர்களை கண்மூடித்தனமாக நம்பி ஏமாந்து போனார்கள். அவர்கள் இதை ஏன் அனுமதித்தார்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிவசேனாவில் ஏதோ நடக்கப்போகிறது என்பது தெளிவாக தெரிந்தது. கட்சியில் பிளவு ஏற்படுவதற்கு 6 மாதத்திற்கு முன்பே ஏதோ நடந்து கொண்டிருந்திருக்கவேண்டும். கடந்த ஜூன் மாதம் பிரச்னை தொடங்கியவுடன் ஏக்நாத் ஷிண்டே குறித்து உத்தவ் தாக்கரேயிடம் பேசினேன்.

உடனே அது பற்றி தனக்கும் தெரியும் என்றும், ஷிண்டேயிடம் பேசுவதாக உத்தவ் தாக்கரே தெரிவித்தார். இப்பிரச்னை சரி செய்யப்படும் என்று என்னிடம் உறுதியளித்தார்” என்று தெரிவித்தார். சிவசேனாவிலிருந்து முதலில் 20க்கும் குறைவான எம்.எல்.ஏ.க்கள் தான் ஏக்நாத் ஷிண்டேயுடன் சென்றனர். அதன் பிறகுதான் ஒவ்வொருவரிடமும் பேசி அழைத்தனர்.

உத்தவ், ஷிண்டே

இடைத்தேர்தலில் போட்டி

மகாராஷ்டிராவில் காலியாக இருந்த 5 சட்டமேலவை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. நாக்பூரில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் வெற்றி பெற்று இருப்பது பாஜக-வுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதையடுத்து மகாராஷ்டிராவில் அடுத்த கட்டமாக இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் சிவசேனா கூட்டணியான மகாவிகாஷ் அகாடி போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளது. இரண்டு தொகுதி பாஜக எம்.எல்.ஏ.க்களும் இறந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் எதிர்கட்சிகளிடம் பேசி போட்டியில்லாமல் தங்களது வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்யவேண்டும் என்று பாஜக பேசிப்பார்த்தது.

ஆனால் பாஜக-வின் கோரிக்கையை எதிர்க்கட்சிகள் நிராகரித்துவிட்டன. இதனால் இரண்டு தொகுதியிலும் எந்த கட்சிகள் போட்டியிடும் என்பது குறித்து என்று மகாவிகாஷ் அகாடித்தலைவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்க இருக்கின்றனர். இதில் ஒரு தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுமா அல்லது உத்தவ் தாக்கரே அணி போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.