வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

க்யூட் பிரட் பால்ஸ்.

தேவை : பிரட் துண்டுகள்- 10

ஒரு கப் சோயா உருண்டைகளை கொதிக்கும் வெந்நீரில்இரண்டுநிமிடம் போட்டு வடித்தெடுத்து,பச்சைத்தண்ணீ ரில் அலசிப் பிழிந்து, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். எட்டு காய்ந்த மிளகாய்,ஆறு பூண்டு பல் இரண்டையும் சிறிதளவு நீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இரண்டு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு அரைத்த மிளகாய் ,பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும். பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சிறிது உப்பு சேர்த்து வதக்கி சோயா மற்றும் இரண்டு ஆர்க்கு கறிவேப்பிலைசேர்த்து நன்கு கிளறி இறக்கவும். ஃ பிரட் துண்டுகளில் ஒன்றை எடுத்து தண்ணீரில் நனைத்து, இரண்டு உள்ளங்கைகளுக்கு இடையே வைத்து, அழுத்தி பிழியவும் .பின்பு அதன் நடுவில் சோயா பூரணம் வைத்து உருட்டி காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும் .மற்ற பிரட் துண்டுகளையும் இதே போல் பொரித்து தக்காளி சாஸூடன்பரிமாறவும். அருமையான ஸ்னாக்ஸ் ரெடி.

Representational Image

திடீரென்று உங்களுக்கு தயிர் வடை சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது ஆனால் வடைக்கு மாவு அரைக்கவில்லையே…ன்னு தோணுதா…நோ.ப்ராப்ளம்.. இதோ உங்களுக்காக..

ஜில்லுன்னு தஹி பிரட்.

தேவை பிரட் துண்டுகள் 10

பிரட் ஸ்லைஸ்களின் மேல் சிறிதளவு வெண்ணை தடவி சூடான தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுத்து தனியே வைக்கவும்.

இரண்டு வெங்காயம் சிறிதளவு மல்லி தழையை சுத்தம் செய்து மிகவும் பொடியாக நறுக்கவும். நறுக்கியவற்றை கெட்டித் தயிரில் போட்டு தேவையான உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிரட் ஸ்லைஸ் ஒவ்வொன்றையும் நான்கு துண்டுகளாக நறுக்கி மேலே தயிர்க்கலவையை ஊற்றி, அதன் மேல் சீரகத்தூள், தனி மிளகாய் தூள் அல்லது மாங்காய் தூள், ஓமப்பொடி தூவி உடனே பரிமாறவும்.(. இல்லாவிட்டால் தயிர் ஊறி ‘தஹி பிரட்’ குடிப்பது போல் ஆகிவிடும், சொத சொதன்னு ஆகிடும்னு சொல்றேன்ப்பா)

Representational Image

சரி இப்போ ஒரு இனிப்பு ரெசிபி செய்யலாமா…

ஸ்வீட் புட்டிங்

தேவை பிரட் துண்டுகள்- 10

காய்ச்சாத பால் நாலு கப், 15 முந்திரி ,15 பாதாம் , அரைக்கப் தேங்காய் துருவல், முக்கால் கப் சர்க்கரை, அரை கப் பால்கோவா, நெய் 2 டேபிள் ஸ்பூன் மற்றும் பிரெட் துண்டுகள் அனைத்தையும் ஒன்றாக அடிகனமான வாணலியில் போட்டுக்கலந்து, அடுப்பில் வைத்து நன்கு கெட்டியாகும் வரை கிளறவும். கடைசியாக அரை டீஸ்பூன் வெனிலா எசன்ஸ் அல்லது பாதாம் எசன்ஸ் சேர்த்துக் கிளறி இறக்கவும். அல்வா பதத்தில் இருக்கும் இந்த’ பிரட் புட்டிங்’ சுவையில் அசத்தும். (விருப்பமெனில் சிறிது ஃபுட் கலர் சேர்த்துக் கொள்ளலாம்)

அட போப்பா இதெல்லாம் செய்யறதவிட… சுலபமா ஒரு ரெசிபி சொல்லுப்பான்னு நீங்க சொல்றது கேக்குது.. இந்த ரெசிபி என் அத்தைக்கு மிகவும் பிடித்தது..

பிரட் கிரிஸ்பி

தேவை பிரட் துண்டுகள் 10

வெங்காயம் தக்காளி தல இரண்டு மற்றும் சிறிதளவு மல்லி தழையை சுத்தம் செய்து மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பிரட் துண்டங்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

Representational Image

அடி கனமான வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய பிரட் துண்டங்களை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.. பின்னர் வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் ,கடுகு ,பெருஞ்சீரகம் தலா கால் டீஸ்பூன் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும் .

வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளி, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் தனி மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்து பச்சை வாடை போகும்வரை நன்கு கிளறவும். பின்னர் அதில் அரை கப் நீர் சேர்த்து சூடாக்கவும் .ஒரு கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள பிரட் துண்டங்கள், பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்து கிளறி பரிமாறவும். சுட சுட சாப்பிட சுவையில் அள்ளும் இந்த பிரட் க்ரிஸ்பி.

பிரட்டில் வித்தியாசமாய் ரெசிபிகள் செய்து குடும்பத்தினரை மகிழ்வித்து மகிழுங்கள்.

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.