இந்தோனேஷியாவில் 7 புள்ளி 7 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியா டனிம்பர் தீவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டருக்கு உணரப்பட்டதாக கூறப்படும் நிலையில், கட்டடங்கள் அதிர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள் விதிகளில் தஞ்சமடைந்தனர். அதேநேரம் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

image

இந்நிலையில் இந்தோனேசியாவைத் தாக்கியிருக்கும் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு பிறகு, டார்வின் உள்ளிட்ட ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால், இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் டனிம்பார் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பில் இருந்து 97 கிலோமீட்டர் (60.27 மைல்) ஆழத்தில் இருந்தது என்றும் EMSC தெரிவித்துள்ளது. மற்றும் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அது பண்டா கடலில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

மேலும் ஆஸ்திரேலியாவின் டார்வினில் நான்கு நிமிடங்களுக்கு நடுக்கம் உணரப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆஸ்திரேலியா நாட்டில் சுனாமி எச்சரிக்கை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டிற்கும், அதன் தீவு பகுதிகளுக்கும் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று கூட்டு ஆஸ்திரேலிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

image

ஒருநாளிற்கு முன்னதாக தான் வனுவாடு நாட்டின் தெற்கு பசிபிக் பெருங்கடலில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, அந்நாட்டிற்கு அமெரிக்கா சுனாமி எச்சரிக்கை விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.