உலகின் தலைசிறந்த பீல்டர்களில் ஒருவராகவும், சிறந்த பிட்னஸ் உள்ள வீரராக பார்க்கப்படும் விராட்கோலி இன்று ஒரே நாளில் 4 கேட்ச்களை தவறவிட்டது எப்போதும் நடக்காத நிகழ்வாக இருந்தது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வங்கதேச தாகா நகரில் வியாழன் அன்று தொடங்கியது. முதல் இன்னிங்ஸ்களில் வங்கதேசம் 227 ரன்களும், இந்தியா 314 ரன்களும் சேர்த்தன. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்த போதும் வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 70 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்து 231ரன்களுக்கு எடுத்துச்சென்றார். சிறப்பான பேட்டிங்கை வெளிக்காட்டிய லிட்டன் தாஸ், 7 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் சேர்த்து சிராஜ் பந்தில் அவுட்டானார்.

4 கேட்ச்களை தவறவிட்ட விராட் கோலி!

image

அக்சர் பட்டேல் வீசிய 44வது ஓவரில் இரண்டு கடினமான கேட்ச்களை தவறவிட்டார். இதைப்போன்ற எத்தனையோ கேட்ச்களை அவர் இதற்கு முன்னர் பிடித்திருக்கிறார், அந்தளவிற்கு சிறப்பான பீல்டர் அவர். பங்களாதேஷ் வீரர் லிட்டன் தாஸ், 44ஆவது ஓவரில் அக்சர் பட்டேலின் பந்து வீச்சில் நல்ல எட்ஜை பெற்றார், பந்து ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த கோலியின் வலது பக்கம் சென்றது. ஆனால், அதை விராட் கோலி தவறவிட பந்து பவுண்டரிக்கு பறந்தது. அதே ஓவரில் அடுத்த பந்திலும் எட்ஜாகி பந்து விராட் கோலியின் இடது பக்கம் செல்ல, வலது பக்கம் சென்ற விராட் கோலி இடது பக்கம் வந்த பந்தை தவறவிட்டார். இந்த ஒரு வாய்ப்பு நிச்சயம் பிடிக்ககூடிய ஒன்றாகவே இருந்தது.

பின்னர் ஒரு கடினமான லோ கேட்ச் மற்றும் அஸ்வின் பந்துவீச்சில் நல்ல உயரத்தில் வந்த ஸ்லிப் கேட்ச் என ஒரே போட்டியில் 4 கேட்ச்களை தவறவிட்டார் விராட் கோலி. இரண்டு கேட்ச்கள் கடினமானதாக இருந்தாலும் இரண்டு கேட்ச்கள் நிச்சயம் கைப்பற்ற வேண்டிய வாய்ப்புகளாகவே இருந்தது.

மோசமான பேட்டிங்கை தொடர்ந்துவரும் விராட்கோலி!

image

145 என்ற எளிதான இலக்கோடு களமிறங்கிய இந்திய அணிக்கு பெரும் சவாலாக செயல்பட்டனர் வங்கதேச அணி பந்துவீச்சாளர்கள். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மெஹிதி ஹாசன் இந்திய ஓபனர்களை கலங்கடித்தார். பல எட்ச்களை கடந்த கேஎல் ராகுல் 2 ரன்களில் ஷாகிப் அல் ஹசன் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் மெஹிதி ஹாசனின் பந்துவீச்சில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி.

பின்னர் விராட் கோலி மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் கைக்கோர்த்து அணியை மீட்க போராடினாலும், 22 பந்துகளை சந்தித்த விராட்கோலியை 1 ரன்னில் வெளியேற்றினார் மெஹிதி ஹாசன். 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுடன் மூன்றாவது நாளை முடித்துள்ளது.

தொடர்ந்து மோசமான பேட்டிங்க் பார்மை சந்தித்து வந்த விராட்கோலி, டி20 வடிவங்களில் தன்னுடைய பழைய பார்மை கொண்டுவந்தது போல தெரிந்தார். ஆனால் அவர் டெஸ்ட் வடிவங்களில் தன்னுடைய மோசமான பார்மை மீண்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

கடைசி 10 இன்னிங்ஸில் 186 ரன்கள் மட்டுமே!

image

டெஸ்ட் வடிவத்தில் தொடர்ந்து மோசமான பார்மை வெளிக்காட்டி வரும் விராட் கோலி தன்னுடைய கடைசி 10 இன்னிங்ஸில் 1, 24, 19, 1, 20, 11, 13, 23, 45, 29 என மொத்தம் 186 ரன்களையே சேர்த்துள்ளார்.

அதில் 4 இன்னிங்ஸ்கள் வங்கதேசம், 2 இன்னிங்ஸ்கள் இங்கிலாந்து, 3 இன்னிங்ஸ்கள் இலங்கை, மற்றும் ஒரு இன்னிங்ஸ் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடி உள்ளார் விராட்கோலி.

ஒரு காலண்டர் ஆண்டில் விராட் கோலி மிகக் குறைந்த பேட்டிங் சராசரி!

image

ஒரு காலண்டர் ஆண்டில் 30+க்கு கீழே குறைந்த வருடங்களில், விராட்கோலி 2022ஆம் ஆண்டும் சேர்ந்துள்ளது.

2011 இல் 22.44 (அறிமுக ஆண்டு), 2020 இல் 19.33, 2021 இல் 28.21 என இருந்த நிலையில் 2022ஆம் ஆண்டிலும் அவருடைய சராசரி 30+க்கு குறைவாக 26.50ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் 2012 முதல் 2019 ஆம் ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக 8 ஆண்டுகளில் 40+ சராசரியாக வைத்திருந்தார் விராட்கோலி.

50+க்கு கிழே குறைந்த டெஸ்ட் சராசரி!

மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் 50+ சராசரி வைத்திருந்த ஒரே வீரர் என்ற பெருமையை தக்கவைத்திருந்த விராட் கோலி, அதனை இந்த வருடத்தில் தவறவிட்டார், இலங்கைக்கு எதிரான தொடரில் சொதப்பிய அவர் 49.95 என டெஸ்ட் சராசரியில் முதல்முறையாக குறைந்தார். இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் 50+ சராசரியை கொண்டுவருவார் என்று எதிர்பார்த்த நிலையில், தொடர்ந்து மோசமான ஆட்டத்தைவெளிப்படுத்தி வரும் விராட் கோலி தற்போது 48.91 சராசரியுடன் 50+க்கு குறைவாகவே நீடித்துவருகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.