நசீம் ஷா கூட 70-80 ரன்கள் எடுக்க முடியும் என்று, பாகிஸ்தான்-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி நடைபெறும் ராவல்பிண்டி ஆடுகளத்தை ஷகித் அஃப்ரிடி சாடியுள்ளார்.

பாகிஸ்தான் மண்ணில் 17 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக இங்கிலாந்து அணி பங்குபெற்று விளையாடுவதால், ஆட்டம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், விளையாடும் ஆடுகளத்தின் தன்மை ஒரு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

image

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் 7 சதங்கள் விளாசி, இரு நாட்டு பேட்ஸ்மேன்களும் மிரட்டி வருகின்றனர். இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் என, இரு அணிகளின் பந்துவீச்சாளர்களும் விக்கெட்டுகளுக்காக போராடும் நிலையில் விளையாடும் மேற்பரப்பில் எந்த உதவியும் கிடைக்கவே இல்லை. இந்த மாதிரியான ஆடுகளத்தில் விளையாடினால், பாகிஸ்தான் WTC இறுதிப் போட்டிக்கு கூட வராது என்று அப்ரிடி சாடியுள்ளார்.

image

சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் இருவரும் ஆடுகளத்தில் இருந்து எந்த உதவியையும் பெறாததால், ஆடுகளம் ஒரு பேட்டிங்கிற்கான சொர்க்கமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து போர்டில் 657 ரன்களை குவித்தது, பின்னர் தொடங்கிய பாகிஸ்தான் பாபர் ஆசம், அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகிய மூன்று பேரின் சதத்தால் இரண்டாவது நாள் முடிவில் 499/7 என்ற ரன்களை சேர்த்துள்ளது.

image

இந்நிலையில், போட்டியின் ஆடுகளம் குறித்து பேசியிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அஃபிரிடி, ”ஒரு கட்டத்தில் ஆட்டத்தைப் பார்க்கவே மனம் வரவில்லை, அது சலிப்பை ஏற்படுத்தியது, பந்து வீச்சாளர்களுக்கு போட்டியில் எதுவும் இல்லை. ஒரு முடிவும் கிடைக்காது என்று நம்புகிறேன், ஏனென்றால் பாகிஸ்தானை இரண்டு முறை இங்கிலாந்து பந்துவீச்சில் வெளியேற்ற முடியும் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

image

மேலும், ”WTC இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்றால், அதற்கு பெரிய அணிகளை வீழ்த்த வேண்டும். பந்து வீச்சாளர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டிய போட்டிகளில் பாகிஸ்தான் விளையாட வேண்டும், எங்கள் பேட்ஸ்மேன்கள் சீக்கிரம் அவுட் ஆகிவிடுவார்களோ என்ற பயத்தில் எங்களால் வாழ முடியாது. சீமிங் பிட்ச்களில் எங்கள் பேட்ஸ்மேன்களை விளையாட வைக்க வேண்டும். ஆனால் இத்தகைய ராவல்பிண்டி போன்ற ஆடுகளங்களில் எங்களின் நசீம் ஷா கூட 70-80 ரன்கள் எடுக்க முடியும்” என்று பாகிஸ்தான் அணி நிர்வாகத்தை சாடியிருந்தார்.

image

ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் ரமீஸ் ராஜாவை, ”பாகிஸ்தான் ஒரு நல்ல 5 நாள் ஆடுகளத்தை உருவாக்குவதற்கு ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது” என்று அஃபிரிடி கூறியிருந்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.