டெல்லி எய்மஸ் மருத்துவமனையின் இணையதளம் ஹேக்கர்கள் வசமிருந்து மீட்கப்பட்டுவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 7 நாட்களாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இணையதளம் மீது வைரல் தாக்குதல் ஏற்பட்டு பரபரப்பை ஏற்பட்டு வந்தது. சர்வர் ஹேக் செய்யப்பட்டிருந்த நிலையில், தொடக்கத்தில் 200 கோடி ரூபாய் கேட்ட ஹேக்கர்கள், 200 கோடி கிரிப்டோ கரன்சிகள் கேட்டு மிரட்டினர்.

பல்வேறு முயற்சிகள் செய்தும் சர்வரை மீண்டும் பழைய நிலைக்கு இன்னும் கொண்டு வரமுடியவில்லை என்றுகூறி, டெல்லி உளவு பிரிவு மற்றும் சைபர் கிரைம் பிரிவு தீவிர மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்தது.

தற்போது உலகதிற்கு அச்சுறுத்தலாய் மாறியிருக்கும் ரான்சாம்வேர் வைரஸ் தாக்கியிருக்கும் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், இணைய தளம் ஹேக் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, சைபர் கிரைம் அதிகரிகளின் ஆலோசனையின் பேரில் கணினிகளின் இண்டெர்நெட் சேவையும் முடக்கப்பட்டது. இதனால் சர்வரில் இருந்த தரவுகளை கையாள முடியாமல் மருத்துவர்களும், நோயாளிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

image

இந்தியாவில் பிரபலமான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இணையதள சர்வரில் முன்னாள் பிரதமர்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய அதிகாரிகள், விஜபிகள் உட்பட 5 கோடிக்கு அதிகமான நபர்களின் தரவுகள் இருக்கிறது என்பதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் கிரிப்டோ கரன்சி தடைசெய்யப்பட்டுள்ளதால், ஹேக்கர்கள் கேட்ட 200 கோடி கிரிப்டோ கரன்சியை இந்திய அரசு எப்படி கொடுக்கும் – இந்த விஷயத்தை இந்திய அரசு எப்படி கையாள போகிறது என்றும் கேள்வி எழுந்து வந்தது.


இந்நிலையில், ”எய்ம்ஸ் மருத்துவமனையின் இணையதளம் மீட்கப்பட்டது. மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் முன்பு, ஆண்டி-வைரஸ் செயல்படுத்தி, பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தரவுகளின் அளவு மற்றும் மருத்துவமனையில் அதிக எண்ணிக்கையிலான சர்வர்கள்/கணினிகள் காரணமாக இயல்புக்கு திரும்ப சிறிது நேரம் எடுக்கும். மேலும் கூடுதல் சைபர் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் – “நீங்கள் யாராக இருந்தாலும்… யாரை விரும்பினாலும் சரி! அன்பு அன்புதான்”- ஜோ பைடன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.