ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா இன்று மத்திய பிரதேசத்தில் நுழைந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் 12 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு, அதன்பின்பு ராஜஸ்தானுக்குள் செல்ல உள்ளனர்.

நடைபயணத்தின் வழியில் அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்து வருகிறார். கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரையின் 77வது நாள்.

இந்நிலையில், ராகுல் காந்தி தாடி வைத்த தோற்றத்தில் இருப்பதால், அவரை ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுடன் ஒப்பிட்டு அசாம் முதல்வர் விமர்ச்சித்துள்ளார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ராகுல் காந்தியையும் மற்றும் பாரத் ஜோடோ யாத்ராவையும் கேலி செய்துள்ளார். குஜராத் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அகமதாபாத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், ‘’  ராகுல் காந்தியின் யாத்ராவால் அவருக்கு புதிய முகம் வந்துவிட்டது. நீங்கள் உங்கள் தோற்றத்தை மாற்ற வேண்டும் என்றால், குறைந்தபட்சம் அதை வல்லபாய் படேல் அல்லது ஜவஹர்லால் நேரு போல ஆக்குங்கள். நீங்கள் காந்திஜியைப் போல் இருந்தால் இன்னும் நல்லது, ஆனால் இப்போது ஏன் சதாம் உசேனைப் போல் தோன்றுகிறீர்கள்?

image
காங்கிரஸ் தலைவர்களின் பழக்கவழக்கங்கள் இந்திய கலாச்சாரத்திற்கு நெருக்கமாக இல்லாததற்கு இதுவே காரணம். அவர்கள் எப்போதும் மற்றவர்களின் கலாச்சாரங்களை பின்பற்ற முயற்சி செய்கிறார்கள்” என்று விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அல்கா லம்பா, “ராகுல் காந்தி ஹிமந்தா பிஸ்வா சர்மாவை விட தான் வளர்க்கும் விசுவாசமான நாய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். அது தான் நல்லது,” என்றார்.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்தீப் தீட்சித், “பாஜகவை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. அவர்கள் இவ்வளவு தாழ்ந்து போவார்கள் என்று நினைக்கவே இல்லை. அவர்கள் பாரத் ஜோடோ யாத்ராவால் திகைத்துப் போய்யுள்ளார்கள்.

image
அவர்களின் தலைவரும் பிரதமர் மோடி சமீபத்தில் தாடி வளர்த்திருந்தார், ஆனால் நாங்கள் எதுவும் சொல்லவில்லை. காரணம், நாங்கள் நாட்டில் இருக்கும் உண்மையான பிரச்சினைகளைப் பற்றி பேசுகிறோம். தனக்கு எதிராக சதி இருப்பதாக பிரதமர் கூறுகிறார். மூடிய கதவுகளுக்கு பின்னால் தான் சதி திட்டங்கள் தீட்டப்படும், லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் யாத்திரையின் போது அல்ல. இதை மக்கள் புரிந்துகொள்வார்கள்” என்றுள்ளார்.

இதையும் படியுங்கள் – 3 டிகிரி குளிருடன் சென்னையில பனிப்பொழிவே இருந்ததுள்ளதாம்! பின்ன ஏன் இப்போ இப்படி?!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.