பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து நியூசிலாந்து அணி அதிர்ச்சி கொடுத்துள்ளது. குரூப் 1 பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தது நியூசிலாந்து. அந்த குரூப்பில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டது. குரூப் – 2 பிரிவில் இந்திய அணி எப்படி பெரிய சிக்கல் இல்லாமல் முதலிடத்தை பிடித்ததோ அதேபோல் நியூசிலாந்து அணியும் குரூப் 1 பிரிவில் முதலிடம் பிடித்தது. ஆனால், தட்டுத்தடுமாறி அரையிறுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் அணியிடம் மிக எளிதாக நியூசிலாந்து தோற்றுவிட்டது. நியூசிலாந்து அணி தோல்வி அடைய 5 காரணங்களை பார்க்கலாம்.

மோசமான பீல்டிங்!

நியூசிலாந்து அணியின் மிகப்பெரிய பலமாக விளங்கியது அந்த அணியின் பீல்டிங் தான். பெரிய அளவில் கேட்ச் எதும் கோட்டை விடாமலும், ரன்களை பீல்டிங் மூலம் கட்டுப்படுத்தியும் குரூப் 12 சுற்றில் அசத்தியது. கிட்டத்தட்ட 19 கேட்சுகளுக்கு மேல் அசால்ட்டாக பிடித்தது. ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான இன்றையப் போட்டியில் நியூசிலாந்து அணி மிகவும் மோசமாக பீல்டிங் செய்தது. கிட்டதட்ட மூன்று கேட்சுகளை கோட்டைவிட்டது. பாபர் அசால் முதல் பந்திலேயே கொடுத்த கேட்சை விக்கெட் கீப்பர் டெவன் கான்வே டிராப் செய்தார். கொஞ்சம் சரியாக முயற்சித்திருந்தால் எளிதில் பிடிக்கக் கூடிய கேட்ச் தான் அது. நடப்பு டி20 தொடரில் தொடர்ந்து சொதப்பி வந்த பாபர் அசாம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இன்று அரை சதம் விளாசினார். ரிஸ்வான் உடனான அவரது பார்ட்னர்ஷிப் பாகிஸ்தான் அணியின் இன்றைய வெற்றிக்கு முக்கிய காரணம்.

image

அதேபோல், பாபர் அசாம், ரிஸ்வான் இருவரும் அரைசதம் அடித்த உடனேயே ஆட்டமிழந்தனர். அப்போது, ஆட்டம் சற்றே நியூசிலாந்து அணியின் பக்கம் திரும்புவது போல் இருந்தது. ஏனெனில் இந்திய அணிக்கு எதிராகவும், ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும் கடைசி நேரத்தில் வெற்றியை கோட்டை விட்டது பாகிஸ்தான் அணி. அதேபோல், 15, 16வது ஓவர்களில் அப்படியான ஒரு தடுமாற்றம் இருந்தது. அந்த நேரத்தில் சவுத்தி ஓவரில் ஹாரிஸ் கொடுத்த கேட்சை சாண்ட்னர் கோட்டை விட்டார். இது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. ஏனெனில் முஹமது ஹாரிஸ் பின்னர் சிக்ஸர் பவுண்டரி விளாசி 30 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை வெற்றிக்கோடு வரை கொண்டு சென்றார்.

நிதானமாக ரன் சேர்க்கும் வில்லியம்சன்!

கேப்டன் வில்லியம்சனின் பேட்டிங் ஸ்டைல் அந்த அணிக்கு மிகப்பெரிய சிக்கலான விஷயமாக இருந்து வருகிறது. அயர்லாந்து அணிக்கு எதிரான கடந்தப் போட்டியில் மட்டுமே 35 பந்துகளில் 61 ரன்கள் விளாசி இருந்தார். ஆனால், மற்ற போட்டிகளில் அவரது ஸ்ட்ரைக் ரேட் மிகவும் மந்தமாகவே இருந்து வருகிறது. பயிற்சி ஆட்டத்தில் இருந்தே இதனை பார்க்கலாம்.

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் .. – 3 (12)

குரூப் 12 சுற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக.. – 23 (23)

குரூப் 12 சுற்றில் இலங்கை அணிக்கு எதிராக .. – 8 (13)

குரூப் 12 சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக.. – 40 (40)

பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் .. – 46 (42)

image

அதாவது பெரும்பாலும் அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 100 ஆக தான் உள்ளது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை போன்ற ஆட்டம் அவருடையதாக இருந்தது அணியை பாதித்துள்ளது. விராட் கோலியும் முதல் சில பந்துகளை நிதானமாக ஆடினாலும் கடைசி நேரத்தில் ரன்களை குவித்து அணியை வெற்றி பெற வைத்துவிடுகிறார். ஆனால், முக்கியமான இன்றைய போட்டியில் கடைசி வரை நின்று அதிரடியாக விளையாடி 60 ரன்களுக்கு மேல் வில்லியம்சன் குவித்து இருந்தால் ஆட்டம் வேறுமாதிரியாக இருந்திருக்கும்.

டாஸ் வென்றதும் பேட்டிங் தேர்வு செய்தது!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அணியிலும் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. முதலில் பேட்டிங் செய்த பின்னர், பயன்படுத்தப்பட்ட மைதானத்தில் பவுலிங் செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார் வில்லியம்சன். ஆனால், பாகிஸ்தான் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்திருந்தால் அந்த அணிக்கு சற்றே நெருக்கடியாக அமைந்திருக்கும். நியூசிலாந்து போல்ட், சவுத்தி என சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். நியூபாலில் நிச்சயம் விக்கெட் வீழ்த்தி இருப்பார்கள். நியூசிலாந்து அணி இரண்டாவதாக பேட்டிங் செய்யும் போதும் அந்த அணிக்கும் நெருக்கடி இல்லாமல் இருந்திருக்கும்.

image

முந்தைய தவறுகளை களைந்து அசத்திய பாகிஸ்தான்!

பாகிஸ்தான் அணியின் பலம் எதுவாக கருதப்பட்டதோ அவை பெரும்பாலும் குரூப் சுற்றிலும் முழுவதுமாக வெளிப்படவில்லை. ஆனால், இன்றைய அரையிறுதிப் போட்டியில் கிட்டதட்ட எல்லாமே வெளிப்பட்டது. அணியின் முக்கிய பலமாக கருதப்பட்ட பாபர் அசாம் – ரிஸ்வான் இணையின் ஆட்டம் குரூப் சுற்றின் ஒரு போட்டியிலும் வெளிப்படவில்லை. ஆனால், சரியான நேரத்தில் இன்றையப் போட்டியில் 105 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதேபோல், வேகப்பந்துவீச்சை சரியாக பயன்படுத்தினர். ஷஹீன் அப்ரிதி இன்றையப் போட்டியில் 2 விக்கெட் வீழ்த்தியதோடு ரன்களையும் கட்டுக்கோப்பாக வழங்கினார். பீல்டிங்கிலும் கடைசி ஓவர்வரை அசத்தலாக செய்தனர். பாகிஸ்தான் அணியின் இந்த எழுச்சி நியூசிலாந்து தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்துவிட்டது.

image

முந்தைய ரெக்கார்ட் பயம் – நம்பிக்கை குறைவுடன் களமிறங்கிய நியூ.!

பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்து அணியின் வின்னர் சதவீதம் மிகவும் குறைவு. அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக இரு அணிகளும் நேருக்கு நேர் 28 போட்டிகளில் மோதியிருந்தன. இதில் பாகிஸ்தான் அணி 17 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தன. அதேபோல், உலகக்கோப்பை போட்டிகளில் நேருக்கு நேர் இதுவரை 6 போட்டிகளில் மோதியிருந்தன. அதில் பாகிஸ்தான் அணி 4 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 2 போட்டிகளிலும் வென்றிருந்தன. அதனால், பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பார்க்கப்பட்டது. அதேபோல், இன்றையப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அசத்தல் வெற்றி பெற்றது. தன்னுடைய வின்னிங் சதவீதத்தையும் கூட்டியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.