டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு, நியூசிலாந்து அணி 150 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

கடந்த 20 நாட்களாக பரபரப்பாக நடைபெற்று வந்த 8-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது கடைசிக் கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 12 சுற்றில் இருந்து அரையிறுதிக்கு நியூசிலாந்து – பாகிஸ்தான், இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகள் தேர்வான நிலையில், முதல் அரையிறுதிச் சுற்று இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து துவக்க ஆட்டக்காரர்களாக ஃபின் ஆலன் மற்றும் கான்வே களமிறங்கினர்.

3 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரி அடித்து 4 ரன்கள் எடுத்தநிலையில், ஃபின் ஆலன், ஷாகீன் அஃப்ரிடி பந்துவீச்சில் எல்பிடபுள்யூ முறையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து கான்வே உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கேன் வில்லியம்சன் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அந்த அணியின் ரன் ரேட் ஏறியநிலையில், 6-வது ஓவரில் 21 ரன்கள் எடுத்தநிலையில், கான்வே ரன் அவுட்டானார்.

image

அந்த அணி 6 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 38 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் வந்த பிலிம்ப்ஸ் 6 ரன்களில் அவுட்டாக, 10 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து நிதானாமான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தனர் கேன் வில்லியம்சன் – மிச்செல் ஜோடி. எனினும் ஷாகீன் அஃப்ரிடி பந்துவீச்சில் 46 ரன்களில் கேன் வில்லியம்சனும் அவுட்டாக, மிச்செல் மட்டுமே பொறுப்புடன் ஆடி ரன் ரேட்டை உயர்த்தினார்.

20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. மிச்செல் (53) மற்றும் நீசம் (16) களத்தில் இருந்தனர். அஃப்ரிடி 2 விக்கெட்டுகளும், நவாஸ் ஒரு விக்கெட்டும் பாகிஸ்தான் சார்பில் எடுத்தனர். 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது பாகிஸ்தான் விளையாடி வருகிறது.

இதனையடுத்து, 153 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்துள்ளது. நடப்பு டி20 தொடரில் இந்த ஜோடி இதுவரை ஒரு போட்டியில் கூட பெரிதாக ஜொலிக்காத நிலையில், இன்றைய போட்டியில் வெளுத்து வாங்குகிறது. 7 ஓவர் முடிவில் அந்த அணி 63 ரன்கள் எடுத்துள்ளது.

பாகிஸ்தான் அணி Vs நியூசிலாந்து

டி20 போட்டிகளை பொறுத்தவரை பாகிஸ்தான் அணியின் கையே நியூசிலாந்துக்கு எதிராக ஓங்கியுள்ளது. இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் 28 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 17 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல், உலகக்கோப்பை போட்டிகளில் நேருக்கு நேர் இதுவரை 6 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் பாகிஸ்தான் அணி 4 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 2 போட்டிகளிலும் வென்றுள்ளன. அதனால், பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.