இன்று நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில் பலம் வாய்ந்த அணியாக தெரியும் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி.

2022 ஆம் ஆண்டின் டி20 உலக்கோப்பை தொடர் விறுவிறுப்பான இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இறுதி நேர திரில்லரின் காரணமாக தொடரிலிருந்து வெளியே செல்லவிருந்த பாகிஸ்தான் அணி 4ஆவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்து இன்று 1.30 மணிக்கு நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி எப்படி இருக்கும் என்ற கணிப்பு யாருக்கும் பெரிதாக தெரிய வாய்ப்பில்லை, ஏனென்றால் இரு அணிகளும் எப்போது வேண்டுமானாலும் அசுர பலத்தோடு ஆடும் அணிகள். இதில் எந்த அணி எப்படி விளையாடப்போகிறது என்று கூறுவது மிகவும் கடினமான ஒன்று.

image

இரு அணிகளுக்குமிடையே உள்ள தற்போதைய பலம் பலவீனத்தை பார்த்தால் இந்த போட்டியில் நியூசிலாந்தின் கையே ஓங்கி உள்ளது. ஆனால் மறந்துவிடக்கூடாது கடந்த 2 வருடங்களாக டி20 வடிவத்தில் அதிக போட்டியை வென்ற அணியாகவும், அதிக ரன்கள் எடுத்த 2 வீரர்கள் பாகிஸ்தான் அணியில் தான் இருக்கின்றனர். இந்த தொடர் முழுக்க சோபிக்காத இங்கிலாந்து கேப்டன் மற்றும் நியூசிலாந்து கேப்டன் பட்லர் மற்றும் வில்லியம்சன் இருவரும் கடைசிபோட்டியில் அவர்கள் தவறவிட்ட தங்களது பார்மை கொண்டு வந்தனர். அப்படி பாபர் அசாமும் அவரது பார்மை திரும்ப கொண்டு வந்தால் இந்த போட்டி தலைகீழாக தான் இருக்கும். 2 அணிகளிடமுமே தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர்.

நியூசிலாந்து அணியின் பலம்:

image

* நடப்பு டி20 உலகக்கோப்பையில் 200 ரன்கள் அடித்த ஒரே அணி நியூசிலாந்து அணி தான்.

* டாப் ஆர்டர்களான பின் ஆலன் மற்றும் க்லென் பிலிப்ஸ் இருவரும் சிறந்த ஸ்டிரைக் ரேட்டில் ஆடிய வீரர்களாக டாப் 10ல் இருக்கின்றனர்.

* அனைத்து போட்டியிலும் 5 பவுலர்களை பயன்படுத்திய ஒரே அணியாக இருக்கிறது. ஏனென்றால் 5 பவுலர்களும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி உள்ளனர்.

* பாஸ்ட் பவுலர்ஸ் (20 விக்கெட்டுகள்), ஸ்பின்னர்ஸ் (14 விக்கெட்டுகள்) என எடுத்துள்ளனர். அனைவரது பவுலிங்க் எகானமியும் 7.13க்கு மேல் இல்லை என்பது பெரிய பலமாக இருக்கிறது.

நியூசிலாந்து அணியின் பலவீனம்:

image
* மிடில் ஆர்டர்கள் இன்னும் சோபிக்கவில்லை. டாப் ஆர்டர்களை வீழ்த்தி விட்டால் இந்த அணியை 150 ரன்களுக்குள் சுருட்டி விடும் விதத்தில் தான் இந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டர்கள் இருக்கின்றனர்.

பாகிஸ்தான் அணியின் பலம்:

image

* பேட்டிங்க் மட்டும் தான் இதுவரை சோபிக்கவில்லை ஆனால் பவுலிங்க் முதல் போட்டியிலிருந்து அசுர பலத்தோடு தான் இருக்கிறது. ஹரிஸ் ராஃப் மற்றும் நஷீம் ஷா இருவரும் விக்கெட் டேக்கிங் பவுலர்களாக இருக்கின்றனர். உடன் சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார் ஷாஹீன் அப்ரிடி.

* இந்திய அணிக்கு பிறகு இந்த ஆண்டில் அதிக டி20 போட்டிகளை வென்ற அணியாக பாகிஸ்தான் அணி தான் இருக்கிறது.

* ஐசிசி டாப் ரேங்கிங் பேட்டர்கள் 2 பேர் ஒரே அணியில் இருக்கின்றனர்.

* டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் மிடில் ஆர்டர் தான் சோபிக்காத நிலையில், மிடில் ஆர்டரில் வரும் மசூத், இஃப்திகார், சதாப் கான் என அனைவரும் சிறப்பான பங்களிப்பை தருகின்றனர்.

பாகிஸ்தான் அணியின் பலவீனம்:

image

* டாப் ஆர்டர்கள் இன்னும் இந்த உலகக்கோப்பையில் பெரிதாக ரன்களே சேர்க்கவில்லை. பாபர் அஷாம், முகமது ரிஸ்வான் இருவரும் இன்னும் சொதப்பியே வருகின்றனர்.

இதுவரை இரு அணிகளுக்கிடையேயான மோதல்

image

இதுவரை பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் 28 முறை டி20 போட்டிகளில் மோதி உள்ளன. அதில் 17 முறை பாகிஸ்தான் அணியும், 11 முறை நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்றுள்ளன.

இந்த பொட்டியில் மழை எப்படி இருக்கும்?

சிட்னி மைதானத்தில் நடைபெற்ற எந்த போட்டிகளும் இதுவரை மழையால் தடைபடவில்லை. ஒருவேளை அதிகாலையில் மழை இருந்தாலும் போட்டி தொடங்கும் நேரத்தில் மழை இருக்காது என்ற நிலையே இருக்கிறது. வெப்பநிலை 17 முதல் 19 டிகிரி நிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்னியில் இதுவரை நடந்த போட்டிகள்

image

2022 டி20 உலகக்கோப்பையில் மொத்தம் 6 போட்டிகள் சிட்னி மைதானத்தில் நடைபெற்று இருக்கின்றன. அதில் நடைபெற்ற 6 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே 5 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த போட்டியில் ஆடுகளம் சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியான ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போட்டி போன்றே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் மொத்தம் 3 ஆடுகளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 3 ஆடுகளங்களும் ஃபிளாட் மற்றும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருந்துள்ளன.

போட்டி & நேரம்

2022 டி20 உலகக்கோப்பையின் முதல் அரையிறுதி போட்டி சிட்சி எஸ்சிஜி மைதானத்தில் இந்திய நேரப்படி டாஸ் மதியம் 1.00 மணிக்கு போடப்பட்டு 1.30 மணிக்கு போட்டி தொடங்கப்படும். இந்தியா முழுவதும் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.