ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தன்னுடைய அதிரடியான பேட்டிங்கால் இந்திய ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். தென்னாப்ரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் போன்றே நாலா புறமும் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி வியக்க வைத்து வருகிறார். இந்நிலையில்தான் அவர் பின்பற்றி வரும் டயட் முறைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உணவு முறைகளில் திட்டமிடல்:

உணவுமுறைகளில் ஏமாற்றாமை, கார்போஹைட்ரேட்டுகள் குறைவு மற்றும் கூடுதல் கஃபைன் போன்றவைதான் சூர்யகுமார் யாதவை குறைந்த பயணத்தில் உச்சியை அடைய வைத்திருக்கிறது என்றே சொல்லலாம். முறையான திட்டமிடலே சூர்யகுமாரை அனைத்துக் கோணங்களிலும் சுழன்று சுழன்று விளையாட வழியமைத்துக் கொடுத்திருக்கிறது. மேலும் உணவுப் பழக்கங்களை மாற்றியமைத்தது அவரது விளையாட்டை தாண்டிய மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும்.

T20 பேட்டரில் பிரபலமான டயட்டீஷியனும், ஊட்டச்சத்து நிபுணருமான ஸ்வேதா பாட்டியா, சூர்யகுமாருக்கு உடல் மற்றும் விளையாட்டை திட்டமிட ஆலோசனை வழங்கியிருக்கிறார். ’’அவருடன் கடந்த ஆண்டிலிருந்து வேலைசெய்துகொண்டுள்ளோம். அவரது உடல் தோற்றம் மற்றும் கட்டுக்கோப்பில் முன்னேற்றம் கண்டுள்ளார். விளையாட்டு ஊட்டச்சத்து பற்றிய அவருடைய புரிதலை மறுசீரமைக்க நான் அவருக்கு உதவினேன்’’ என்று கூறியுள்ளார் பாட்டியா.

image

5 முக்கிய அம்சங்கள்:

சூர்யகுமாரின் டயட்டை 5 அம்சங்களை வைத்து உருவாக்கியதாக கூறுகிறார் பாட்டியா.

’’முதலாவதாக, பயிற்சி மற்றும் போட்டிகள் இரண்டிலும் செயல்திறனை அதிகரித்தல்.

இரண்டாவது மற்றும் மிக முக்கியமானது, தடகள மண்டலத்திற்குள் (12-15%) உடல் கொழுப்பை பராமரிக்க அவருக்கு உதவியது.

மூன்றாவது, டயட் முறையானது அறிவாற்றலையும், உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்கவேண்டும்.

நான்காவது, அடிக்கடி பசியைத்தூண்டும் உணவுகளை தவிர்க்கவேண்டும்.

கடைசியாக, உடல் மீட்சியடைதல், ஒரு விளையாட்டு வீரருக்கு மிகமிக அவசியமானது இது.

கார்போஹைட்ரேட் அளவு:

சூர்யாவின் சுறுசுறுப்பை அதிகரிக்க, உட்கொள்ளும் கார்போஹைட்ரேட் அளவு குறைக்கப்பட்டது. குறைந்த கார்போஹைட்ரேட் திட்டத்தின்மூலம் கட்டமைக்கப்பட்ட செயல்திறனை எவ்வாறு பராமரிக்கலாம் மற்றும் மேம்படுத்தலாம் என்பதை சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது’’ என்று கூறுகிறார்.

image

தொடர்ந்து, “சூர்யாவின் டயட்டிலிருந்து கார்போஹைட்ரேட் நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக நட்ஸ் போன்ற ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் ஒமேகா 3 போன்றவை சேர்க்கப்பட்டது. முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்ற முதல்தரமான அசைவ புரதங்கள் அவரது டயட்டில் இடம்பெறுகிறது. மேலும் பால் பொருட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டுகள் சேர்க்கப்படுகிறது. ஒரு விளையாட்டு வீரருக்கு உடல் நீரேற்றத்துடன் இருப்பது மிகமிக அவசியம் என்பதால் திரவங்களும், எலக்ட்ரோலைட்டுகளும் டயட்டில் இடம்பெறுகின்றன.

போட்டி மற்றும் பயிற்சிகாலத்திற்கு ஏற்றவாறு திரவங்களும் எலக்ட்ரோலைட்டுகளும் கொடுக்கப்படுகின்றன. பயிற்சிக்கு முன், பயிற்சியின்போது மற்றும் பயிற்சிக்கு பின் என விளையாட்டு செயல்திறனை அதிகரிக்கும் சப்ளிமெண்ட்ஸ் சேர்க்கப்படுகின்றன. குறிப்பாக புரதங்கள், வைட்டமின்கள், மினரல்கள், ஆண்டி ஆக்சிடண்டுகள் போன்ற சப்ளிமெண்ட்ஸ்களும் சேர்க்கப்படுகின்றன. இதன் அடிப்படைகள் ஒவ்வொரு ஆட்டத்தின்போதும் மாற்றியமைக்கப்படுகின்றன’’ என்று கூறினார்.

image

டயட்டை ஏமாற்றுவதை சூர்யா ஏற்றுக்கொள்ளமாட்டார்

’’சூர்யா தனது விளையாட்டு மற்றும் முன்னேற்றத்தின்மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். எனவே உணவுகளை ஏமாற்றுவது கிடையாது. நொறுக்கு தீனி மற்றும் சௌகர்யமான உணவுகளை அவர் விரும்புவதில்லை. கடந்த சில ஆண்டுகளாக சூர்யாவின் வளர்ச்சியை கவனித்தால், அவர் தனது உடலை எவ்வாறு பராமரிக்கிறார் மற்றும் கட்டுக்கோப்புடன் இருக்கிறார் என்பது தெரியும். அவருடைய கடுமையான உழைப்புக்கான பலனைத்தான் அவர் இன்று பெற்றுக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்’’ என்று கூறுகிறார் பாட்டியா.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.